100 நாள் வேலைத் திட்டம்: 1.2 கோடி தொழிலாளர்கள் விடுபடும் அபாயம் பிருந்தா காரத் எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

100 நாள் வேலைத் திட்டம்: 1.2 கோடி தொழிலாளர்கள் விடுபடும் அபாயம் பிருந்தா காரத் எச்சரிக்கை!

புதுடில்லி, ஆக.31 மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர் களின் ஆதார் அட்டை இணைக்கப் படாததால் கோடிக்கணக்கானவர்கள் விடுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வலி யுறுத்தியுள்ளார்.  

100 நாள் வேலைத்திட்டம் என்று அழைக்கப்படுகின்ற மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்கள் ஆதார் அடிப்படையிலான பணம் கொடுக்கல் முறையில் இணைந்து கொள்ள வேண்டியது கட்டாயம் என்று ஒன்றிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் நாட்டில் இதற்காக வேலை அட்டை வைத்திருக்கும் 26 கோடி பேர்களில் 41.1 விழுக்காடு பேர்  இதுவரையிலும் இதற்குத் தகுதி பெற வில்லை. ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் இதற்காக மேலும் கால நீட்டிப்பு செய்ய முடியாது என்று திட்ட வட்டமாக அறிவித்துள்ளது.

இதனால் நாட்டில் 1.2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடு படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இப்பிரச்சினையில் ஒன்றிய அரசாங்கம் உடனடியாகத் தலை யிட்டு, எவரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தி பிருந்தாகாரத், ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.  

அந்த கடிதம் வருமாறு:  

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் சம்பந்தமாக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக் கைகளால் பல  மோசமான பாதிப்பு களை ஏற்படுத்துகின்றன என்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு  மிகவும் குறைவு. தங்கள் அமைச் சகத்தின் இணைய தளத்தின்படி இதற்கு ஒதுக்கிய தொகைகளில் 91 விழுக்காடு ஏற்கெனவே செலவாகி விட்டது. இத்திட்டத்தின்கீழ் வேலை செய்பவர்களின் சராசரி நாட்கள் தற்போது 35.4 என  குறைந்துவிட்டது. இத்தகு சூழ்நிலையில் இத்திட்டத் தின்கீழ் வேலைசெய்யும் தொழி லாளர்கள் எண்ணற்ற பிரச்சினை களை எதிர்கொள்கிறார்கள்.

இப்போது ஆதார் அடிப்படை யில் பணம் பட்டு வாடா செய்வதை அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதனால் தொழிலாளர்களுக்கு காலத் தில் ஊதியம் வழங்கப்படவில்லை.

அரசுத் தரப்பில் இவ்வாறு ஆதார் அடிப்படையில் ஊதியம் வழங்கப் படுவது கட்டாயப்படுத்தப்படாது என்று ஜூன் மாதத்தில் கூறப்பட்டது. எனினும் இக்காலக்கெடு நீட்டிக்கப் படாது என செய்தி வெளியாகியுள் ளது. மொத்தம் உள்ள 26 கோடி வேலை அட்டைதாரர்களில் 41.1 விழுக்காட்டினர் இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறவில்லை என்று அது கூறுகிறது. அய்ந்து மாநிலங்களில் 1.2 கோடி தொழிலாளர்கள் ஊதியம் பெறத் தகுதி யற்றவர்களாகி இருக் கிறார்கள். இதனால் தொழிலாளர் களுக்குப் பெரிய  அளவில் இழப்பு ஏற்படும் என்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருக் கின்றன.

கடந்த ஆறு மாதங்களில் நான் பல மாநிலங்களில் பல தொழிலாளர் களைச் சந்தித்தேன். இணையப் பதிவு மூலம் வருகையை உறுதிப் படுத்துவது சம்பந்தமாக எண்ணற்ற புகார்களை அவர்கள் என்னிடம் அளித்தார்கள். கிராமப்புற இந்தியா வில் இணைய இணைப்பு என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக பழங்குடியினர் வாழும் பகு திகளில் மிகமிக மோச மாகும். இவர் கள் கட்டாயமாகப் பதிவு செய்யப் படவேண்டும் என்பது இந்தத் தொழி லாளர்களுக்கு மிகவும் சிரமங்களை ஏற்படுத்திடும்.  

இத்திட்டத்தில் வேலை செய் திடும்  பெண் தொழிலாளர்கள் இந்த முறையின் மூலமாக மிகவும் பாதிக் கப்படுவார்கள். இதனால் அவர்கள் பல இடங்களில் வேலை செய்தும் ஊதியம் மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடிதத்தில் தெரிவித் துள்ளார். 

No comments:

Post a Comment