மதுரை, ஜூலை 31- மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் மார்க்கெட் அனைத்து வியாபாரி கள் கூட்டமைப்பு சங்கத்தலைவர் என்.சின்ன மாயன் கூறுகையில், ''காய்கறி சந்தைகளில் எளிதில் அழுகக்கூடிய, அழியக்கூடிய தக்காளி விலை நிலையாக இருக்காது. திடீரென்று விலை கூடும், குறையும். ஆனால், தக்காளி சந்தை வரலாற் றிலேயே இந்த முறைதான் ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் விற்கிறது.
நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி வியாபாரம் செய் கிறேன். நானே, தக்காளி இதுபோல் தொடர்ந்து விலை அதிகமாக விற்றதை பார்க்க முடியவில்லை. நாங்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.170 விற்பதால் சில்லறை வியாபாரிகள் ரூ.200க்கு விற்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பயிரிட்ட செடி களில் தற்போது தக்காளி அறு வடை தொடங்கியிருக்கிறது. ஆனால், கருநாடகா, ஆந்திராவில் தற்போது வரை மழை நிற்கவில்லை. அதனால், அந்த இரு மாநில வியா பாரிகளும், தமிழ்நாட்டில் தக்கா ளியை தற்போது கொள்முதல் செய்ய ஆரம்பித்ததால் நமது மாநி லத்தில் உற்பத்தியாகும் தக்கா ளிகள் அந்த மாநிலங்களுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பருவம் தவறி பெய்த மழை, நீண்ட கொளுத்தும் வெயிலும் காய்கறிகள் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
இன்னும் ஒரிரு வாரங்களில் ஆந்திராவில் ஆனந்தபூர், கல்யாண துர்கா, தாவணிக்கரை, மூன்று இடங்களில் தக்காளி வர ஆரம் பித்துவிடும். ஆனந்தப்பூர் தக்காளி சந்தை இந்தியாவுக்கே தக்காளியை வழங்கிவிடும்.
அப்போது தமிழ்நாட்டில் தக் காளி மிகக் குறைவாக விற்க ஆரம்பிக்கும். இன்னும் 15 நாட்கள் இந்த விலை நிற்காது. இன்னும் ஒரு வாரம் முதலே தக்காளி வரத்து தமிழ்நாடு சந்தைகளில் வர ஆரம் பித்து விலை குறைய வாய்ப்புள்ளது'' என்றார்.
No comments:
Post a Comment