கடவுள் கை கொடுக்கவில்லை சதுரகிரி மலையில் காட்டுத்தீ! பக்தர்கள் மலையேறத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 31, 2023

கடவுள் கை கொடுக்கவில்லை சதுரகிரி மலையில் காட்டுத்தீ! பக்தர்கள் மலையேறத் தடை

வத்திராயிருப்பு, ஜூலை 31-  சதுர கிரி மலையில் பரவிய காட்டுத்தீ காரணமாக சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல நேற்று (30.7.2023) தடைவிதித்ததால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

சிறீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள் ளது. இக்கோயிலுக்கு சுமார் 10 கி.மீ. தூரம் கரடு முரடான வனப் பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும்.

 சாப்டூர் வனச்சரகம் 5ஆ-வது பீட்டில் சதுரகிரி மலையை ஒட்டி யுள்ள ஊஞ்சக்கல் பகுதியில் காட் டுத்தீ பற்றியது. இதனால் கோவி லுக்குச் செல்பவர்களின் பாதுகாப் புக் கருதி சதுரகிரி செல்ல நேற்று (30.7.2023) தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிக ளில் இருந்து வந்திருந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்திலேயே நின்று மலையேறமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதற்கிடையே, காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக மழையின்றி வனப் பகுதி வறண்டு இருப்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாலும் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment