பெரியாரிசம் வாழ்வியல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

பெரியாரிசம் வாழ்வியல்

தந்தை பெரியார் அவர்கள் மதங்களுக்கு எதிரானவர்: ஆனால் மதங்களுக்கு இடையில் மோதல் களை உருவாக்கியவர் அல்லர்.

பெரியார் அவர்கள் ஜாதிகளுக்கு விரோதமான வர்; ஆனால், ஜாதிகளுக்கிடையில் சண்டை மூட்டிய வர் அல்லர், பெரியார் அவர்கள் சமுதாயங்களில் புரையோடிப் போயிருந்த மூட பழக்கவழக்கங்கள் சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை எதிர்த்த வர். எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் வன்மையாகக் கண்டித்து எழுதியவர். ஆனால் அவரின் சீர்திருத்தப் பிரச்சாரத்தால் எவர் மத்தியிலும் சீற்றங்கள் தோன்றிய தில்லை. சுமுகமான மாற்றங்களே தோன்றின.

கலவரங்களைத் தூண்டுவோர் 'பெரியார்' என்னும் பெயருக்குரிய தலைவரை நினைத்து உள்ளடக்கம் கொண்டு ஒதுங்கி வாழ்ந்தனர்.

பெரியார் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர் அல்லர். யாரையும் திருப்திப்படுத்துவதற்கு எந்தச் சொல்லும், செயலும் இருந்ததில்லை. இதனால் பெரி யாரின் சொல் தமிழ்நாட்டை வெல்லும் சொல்லாகப் பரவியது.

பெரியாரின் சிந்தனைகள் கருத்துக்கள், சீர்திருத்தங் கள் வருங்காலத்திற்குரிய திட்டங்கள் யாவும் இன் றைக்கு "பெரியாரிசம்' என்ற தனித்துவமாகியிருக்கிறது.

பெரியாரின் தத்துவங்கள் அவர் வாழ்ந்தபோது தழைத்து ஓங்கி நின்றன. ஆனால், அவரின் வாழ்வுக்குப் பிறகு, அவரின் தத்துவங்கள் வரலாறாகி விட்டிருக் கின்றன.

வரலாறாகிவிட்டிருக்கிற பெரியாரின் தத்துவங்கள் தமிழ்நாட்டில் வாழ்வியலாக மாறிவிடும் காலம் வருமா?

('மணிச்சுடர்' 17.9.1999)


No comments:

Post a Comment