மேட்டூர், ஜூலை 31- மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாசனத்திற் கான தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 26ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர் திறப்பானது நேற்று (30.7.2023) மாலை முதல் வினாடிக்கு 14 ஆயி ரம் கன அடியாக அதிகரிக்கப்பட் டுள்ளது.
அணைக்கு நீர்வரத்து படிப்படி யாக குறைந்து வரும் நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப் பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்பு உள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65.60 அடி யாக இருந்தது. அணைக்கு வினா டிக்கு 11 ஆயிரத்து 342 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment