அகமதாபாத்தில் கூடிய ஒரு ஒடுக்கப்பட்டோர் கூட்டத்தில் பேசுகையில் டாக்டர் அம்பேத்கர் கூறியதாவது:-
எனக்குக் காங்கிரசிடமும் காந்தியாரிடமும் நம்பிக்கையே கிடையாது. காந்தியார் மூலமோ, காங்கிரஸ் மூலமோ ஒடுக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய நன்மையும் கிடையாது. வட்டமேஜை மாநாட்டுக் காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவத்தினால் காந்தியாரிடம் எனக்கிருந்து வந்து நம்பிக்கை சிதறுண்டுவிட்டது. எல்லாக் கட்சியாரும் சம்மதித்தால் சட்டசபைகளில் ஒடுக்கப்பட்டவர்களுக்கென இடம் ஒதுக்கலாம் எனக் காந்தியார் முதலில் சொன்னார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடம் ஒதுக்க முஸ்லிம்கள் சம்மதித்தார்கள். ஆனால், காந்தியார் மட்டும் இணங்கவில்லை. அம்மட்டோ மந்திரி சபைகளில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கானவை ஆராய்ந்து வேண்டுவன செய்ய முன்னிருந்த பம்பாய் மந்திரிகள் பல கமிட்டிகளை நியமித்திருந்தார்கள். அந்தக் கமிட்டிகளின் சிபாரிசுகளை அமலில் கொண்டுவர பம்பாய் காங்கிரஸ் மந்திரிகள் இதுகாறும் எதுவும் செய்யவில்லை. ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றில் ஒரு தனி இயக்கம் காண வேண்டும் அல்லது சுயேச்சைத் தொழிற் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும். சுயேச்சைத் தொழிற் கட்சிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கும் சக்தியும் பெருகி வருகிறது.
No comments:
Post a Comment