துறையூர் பயிற்சி முகாமில் கழக துணைப் பொதுச் செயலாளர் விளக்கம்!
*வி.சி.வில்வம்
"பெரியாரை இந்தியர்கள் தேடுவது ஏன்? இந்தியாவுக்குப் பெரியார் ஏன் தேவை?" எனத் துறையூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பேசினார்.
ஜாதி என்றால் என்ன?
"தந்தை பெரியாரும், ஜாதி ஒழிப்பும்" எனும் தலைப்பில் அவர் பேசும் போது, ஜாதி என்றால் என்ன? ஜாதி என்கிற வார்த்தை களை எந்தெந்த இடங்களில் கேள்விப் பட்டுள்ளீர்கள் எனக் கேட்டார். பள்ளிகளில், திருமண வீடுகளில், தேர்தல் நேரங்களில் கேள்விப்பட்டுள்ளதாக மாணவர்கள் பதில ளித்தனர்.
பள்ளிகளில் ஜாதி கேட்பது உண்மைதான். அதேநேரம் "ஜாதி பார்த்து தான் வகுப் பறையில் உட்கார வைக்கிறார்களா?", என்ற போது, "இல்லை" என மாணவர்கள் தலை யசைத்தனர்.
மனிதர்களின் அடையாளம் என்ன?
உலகம் முழுவதும் வாழும் மனிதர்களின் அடையாளமாக அவர்களின் பெயர் இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, சாதனை இருக்கிறது, இன்னும் பல இருக்கிறது. ஆனால் இந்திய மனிதனுக்கு என்ன இருக் கிறது? ஜாதி தான் அடையாளமாக இருக் கிறது. முதலில் ஜாதி என்பதே தமிழ் கிடை யாது. எந்த ஒன்றுக்கும் தமிழில் சொற்கள் இல்லையென்றால், அதற்கும் தமிழர் களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பொருள். ஆனால் தமிழில் "சாதி" என்றொரு வார்த்தை உண்டு. அது "சாதிக்க வேண்டும்" என்கிற பொருளில் வழங்கப்படுகிறது. அதனால் தான் சமஸ்கிருத வார்த்தையான ஜாதியை ஜாதி என்றே எழுதுங்கள், தமிழ்ப்படுத்த வேண் டாம் எனத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப் பிட்டார்கள்.
பிறந்த குழந்தை என்ன ஜாதி?
"ஜா" என்பது தமிழ் இல்லை என்று சொன்னோம். அது ஒரு சமஸ்கிருத சொல். "ஜா" என்றால் பிறப்பு என்று பொருள். வனஜா, கிரிஜா, ஜலஜா எனப் பார்ப்பனர் வீடுகளில் பெயர் வைப்பார்கள். வனத்தில் பிறந்தவர், மலையில் பிறந்தவர், தண்ணீரில் பிறந்தவர் என்று அதற்குப் பொருள். பொது வாக நீங்கள் எந்த மதம் என்று கேட்டால், நாங்கள் இந்து மதம் என்பார்கள். ஒரு குழந்தை நேரடியாக இந்து மதத்தில் பிறக்க முடியுமா? ஒரு குழந்தை மருத்துவமனை அல்லது வீட்டில் பிறந்திருக்கும். பிறகு எப்படி இந்து என்கிற அடையாளம் வருகிறது. அதேபோல பிறந்த குழந்தைக்குப் பெயர் வைப்பதற்கு முன்னரே, எப்படி ஜாதி வந்து விடுகிறது? இதைத்தான் பிறப்பின் அடிப்படையில் ஜாதி என்கிறது ஆரியம். நம் பெற்றோர் என்ன ஜாதியோ, அதே ஜாதி குழந்தைக்கும் ஒட்டிக் கொள்கிறது.
ஜாதிப் பிரிவுகளும்; ஜாதிப் பிளவுகளும்!
தொழில் அடிப்படையில் தான் ஜாதிகள் இருக்கின்றன என்பார்கள். மீன் பிடித்தால் மீனவர், விவசாயம் பார்த்தால் விவசாயி, மண்பாண்டம் செய்தால் குயவர், செருப்பு தைத்தால் அருந்ததியர் என்று கூறுவார்கள். அப்படியெனில் இவர்களில் சிலர் மருத்துவர், வழக்குரைஞர், அய்.ஏ.எஸ், நடிகர் என்று தங்கள் திறமையால் உருவானால், இவர்களை என்ன ஜாதியிட்டு அழைப்பது? அந்தத் தொழில்களுக்கு ஜாதி இருக்கிறதா? ஆக தொழில் அடிப்படையில் வருவதல்ல ஜாதி; பிறப்பின் அடிப்படையில் வருவதே ஜாதி. பிறக்கும் போதே ஒருவர் உயர்ந்த ஜாதி, மற்றவர் தாழ்ந்த ஜாதி எனத் தீர்மானித்து விட்ட பிறகு, தொழில் முறை எங்கிருந்து வருகிறது? சாதாரண ஒரு வெள்ளை நூல், அதைப் பூணூல் என்கிறார்கள். அந்த நூலை நாம் போட முடியுமா? பிறப்பின் அடிப் படையில் உயர்ந்த ஜாதி என்பதால் நாங்கள் மட்டுமே போடுவோம் என்கிறார்களே? பிறப்பில் உருவாகும் ஜாதி, இறப்பு வரை நீண்டு, இறந்த பிறகும் சுடுகாடு வருகிறதே? அதனால் தானே ஜாதியைப் பிறவி இழிவு என்றார் பெரியார்.
ஜாதியைக் கண்டுபிடிக்க முடியுமா?
நாய்களில் பல வகைகள் இருக்கிறது, கண்டுபிடிக்கலாம். மனிதர்களில் மங்கோலிய இனம், ஆப்பிரிக்க இனம் என்கிற பல வகைகள் உண்டு, கண்டுபிடிக்கலாம். ஒரு மனிதன் ஆணா? பெண்ணா? தெரிந்துவிடும். இந்த ஜாதி இருக்கிறதே, அதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? ஒரு மனிதரைப் பார்த்தவுடன் ஜாதியைச் சொல்லிவிட முடியுமா? முடியவே முடியாது. அதனால் தான் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிக்கான அடையாளத்தோடு வாழ்கிறார்கள். பொது வெளியில் சட்டை கூட போடாமல், பூணூல் மாட்டிக் கொண்டு, நாங்கள் 'பிராமணர்கள்', உயர்ந்த ஜாதி என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தொழிலாளர்களை பிரிக்கும் ஜாதி
ஜாதியால் என்ன பிரச்சினை? அதை ஏன் ஒழிக்க வேண்டும்? என்று சிலர் கேட் கிறார்கள். அதிகாரி - ஊழியர், மேஸ்திரி - சித்தாள், மேலாளர் - காசாளர் என்று தானே பிரிவுகள் இருக்கின்றன என்கிறார்கள். கூர்ந்து கவனித்தால் ஜாதி என்பது தொழிலைப் பிரிக்கவில்லை; தொழிலாளர் களைப் பிரிக்கிறது. ஒருவரைத் தொடக்கூடாது என விலக்குகிறது, இவரை வீதியில் நடக்கக் கூடாது என மறிக்கிறது, அவரைப் படிக்கக் கூடாது எனத் தடுக்கிறது.
ஆக இந்து மதம் பார்ப்பனர்களைத் தவிர, மற்ற அனைத்து ஜாதியினரையும் சூத்திரன் என்றே அழைக்கிறது. அதாவது 'விபச்சாரி மகன்' என்று! இதைக் கேட்ட பிறகும் தமிழர் களுக்கு ஏன் கோபம் வரவில்லை? அப்படி சொன்னது கடவுள் என்று சொல்லிவிட் டார்கள். நானே நான்கு ஜாதிகளையும் படைத்தேன் என்று சொல்லிவிட்டான் பகவான் கிருஷ்ணன்.
பள்ளிகளில் ஜாதி வாரியாக உட்கார வைக்கிறார்களா?
கரோனாவை ஊசி போட்டு ஒழித்தோம், ஜாதியை எப்படி ஒழிப்பது? மனிதர்களைத் தூக்கிட்டு கொன்றால் ஜாதி போய்விடுமா? பள்ளியில் ஜாதி கேட்பதால் ஜாதி இருப்பதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதி கேட்கிற பள்ளி களில் ஜாதி வாரியாக உட்கார வைக் கிறார்களா? பள்ளியின் உள்ளே விடக்கூடாது என்பதற்காக நம் ஜாதியை முன்பு கேட் டார்கள். நாம் தான் முதலில் படிக்க வேண்டும் என்பதற்காக நம் ஜாதியை இப்போது கேட்கிறார்கள். உணவகங்களில் சில மேசை களில் Reserved என்று இருக்கும். அந்த மேசைகளின் பக்கம் யாரும் போக மாட் டார்கள். தொடர்வண்டிகளில் முன்பதிவு (Reserved) செய்துவிட்டால் அந்த இருக் கைகளை யாரும் ஆக்கிரமிக்க மாட்டார்கள். அதேநேரம் முன்பதிவு இல்லாத பெட்டி களிலும், பேருந்துகளிலும் இருக்கைக்காகப் பெரும் போராட்டமே நடக்கும். இதுதான் இடஒதுக்கீட்டின் பாதுகாப்பு. ஜாதிகளை ஒன்றிணைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் எனப் பல வகையாகப் பிரித்து, கல்விக்கான இடத்தை ஒதுக்கீடு செய்யவே பள்ளிகளில் ஜாதி கேட்கிறார்கள்.
கோவிலில்தான் ஜாதி இருக்கிறது!
ஜாதி வந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. சான்றிதழில் ஜாதியைக் குறிப்பிட தொடங்கி 100 ஆண்டுகளே ஆகிறது. எனவே ஜாதி என்பது சான்றிதழில் இருக் கிறது, திருமணத்தில் இருக்கிறது, தேர்தலில் இருக்கிறது என்று சொல்வதற்கு முன்னால், ஜாதி இந்து மதத்தில் இருக்கிறது, கோயிலில் இருக்கிறது, அக்கிரகாரத்தில் இருக்கிறது, அரசமைப்புச் சட்டப்படி இருக்கிறது என்று சொல்லி பழக வேண்டும். இன்றைக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள், ஜாதியின் கட்ட மைப்பு அசைத்து வைத்துள்ளது. அதேநேரம் ஜாதி என்பது கட்டடம் அல்ல, ஒரே நேரத்தில் இடித்துத் தள்ளுவதற்கு! அது மனித மூளையில் உள்ளது, மனநோயாக தொடர் கிறது. நீங்கள் மதம் மாறலாம், மொழியை மாற்றிக் கொள்ளலாம், நாட்டை மாற்றிக் கொள்ளலாம், ஏன்... கடவுளைக் கூட மாற்றலாம். ஆனால் ஜாதியை மட்டும் மாற்றவே முடியாது. இந்த ஜாதியைக் காப்பாற்றுவதே இந்து மதமும், அதன் கடவுள்களும் தான். எனவே ஜாதியை ஒழிப்பதன் மூலமே, அந்தச் சிந்தனைகளை அப்புறப்படுத்துவதன் மூலமே மனிதத்தை மலர செய்ய முடியும், அதுவே பெரியாரின் வழியும் ஆகும்", என விளக்க உரையாற்றினார்.
தலைப்பும்; வகுப்பும்!
பயிற்சி வகுப்பில் "தந்தை பெரியார் ஓர் அறிமுகம்" எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, "பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு" என்கிற தலைப்பில் முனைவர் துரை. சந்திரசேகரன், "சமூக ஊடகங்களில் நமது பங்கு" எனும் தலைப்பில் பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம், "தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் சாத னைகள்" என்னும் தலைப் பில் வழக்குரைஞர் பூவை. புலிகேசி, "தந்தை பெரி யாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்" தலைப்பில்* *முனைவர் மு.சு.கண்மணி ஆகியோர் வகுப்பெடுத் தனர்.
பட்டதாரி மாணவர்கள் பங்கேற்பு
வகுப்பில் 77 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் 46 பெண்கள் 31. இவர்களில் பொறியியல் பட்டதாரிகள் 7 பேர், முதுகலை பட்டதாரிகள் 15, இளங்கலை பட்டதாரிகள் 15, தொழில் நுட்பப் பட்டயதாரர்கள் 5, மேல்நிலைப்பள்ளி 15, உயர்நிலை பள்ளி 7, நடுநிலைப் பள்ளி 13 என மாணவர்கள் பங்கேற்றனர். வகுப்புகளை நன்கு கவனித்து, சிறப்பாகக் குறிப்பெடுத்த ஒக்கரை வி.சிறீநிதி முதல் பரிசும், ஒக்கரை ரா.சுமிதா இரண்டாம் பரிசும், சிக்கத்தம்பூர் ந.நேத்ரா மூன்றாம் பரிசும் பெற்றனர். தவிர வகுப்புகள் முடிந்த பிறகு மூன்று மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். பெரும் தயக்கமும், குழப்பமும், பயமும் கொண்டு யாரும் வரவில்லை. சிறிது நேரம் கழித்தே மூவர் வந்தனர் அவர்களுக்கு நூல்கள் பரிசளிக்கப்பட்டன. தயக்கத்தை முதலில் ஒழியுங்கள்; இந்தப் பயிற்சி வகுப்பின் நோக்கம் அதுதான் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தம் பொறுப்பில் செட்டி குளம் பகுதியில் இருந்து 8 மாணவர்களை அழைத்து வந்ததோடு, மேற்கண்ட பரிசு களையும் சொந்தப் பொறுப்பில் வழங்கினார் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர். ஆண்டுதோறும் குற்றாலம் பயிற்சி முகாமுக்கு மாணவர்களை இவர் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
நிறைவு விழா!
தமிழ்நாடு முழுக்க பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவதின் நோக்கம், ஆயிரக் கணக்கான மாணவர்களைச் சந்திப்பதற்கே! இதற்கு இயக்கத் தோழர்கள் செய்து வரும் அளப்பரிய உழைப்பு, மிகுதியான பொரு ளாதாரம், இந்த இயக்கத்தின் நூற்றாண்டு கால தொடர் பணிகள் ஆகிவற்றை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளரும், பயிற்சி பட்டறை பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் விரிவாக எடுத்துரைத்தார். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு, குழுப்படம் எடுக்கப்பட்டது.
பங்கேற்பும், பங்களிப்பும்!
துறையூர் மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ்பாபு வரவேற்புரை ஆற்றினார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன் தலைமை வகித்தார். தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட், மாவட்டத் துணைத் தலைவர் முசிறி மா.இரத்தினம், துணைச் செயலாளர் இரா.சித்தார்த்தன், மாவட்ட அமைப்பாளர் தா.அசோகன், மாவட்டப் பகுத்தறிவு ஆசிரி யரணி தலைவர் அ.சண்முகம், செயலாளர் பி.பிரபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகாமுனி நன்றி கூறினார்.
துறையூர் ஒன்றியத் தலைவர் பா.பாரதி, செயலாளர் வரதராஜன், மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் செ.செந்தில்குமார், துணைச் செயலாளர் சு.சரண்ராஜ், மாவட்ட ப.க அமைப்பாளர் மு.தினேஷ், துணைத் தலைவர் த.கலைப்பிரியன், முசிறி ஒன்றியச் செயலாளர் அ.அருணகிரி, உப்பிலியபுரம் ஒன்றிய அமைப்பாளர் நாகநல்லூர் பாலச் சந்திரன், உப்பிலியபுரம் ப.க ஒன்றியச் செய லாளர் சி.சத்தியசீலன், துறையூர் நகரத் தலைவர் க.ராஜா, நகரச் செயலாளர் ந.இளையராஜா, நகர அமைப்பாளர் க.பாலகிருஷ்ணன், நகர ப.க அமைப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், ப.க.துணை அமைப் பாளர் க.கபில்தேவ், ச.சர்ஜுன், மாவட்டத் திராவிடர் கழக அமைப்பாளர் த.ரஞ்சித்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் ரெ.தனராஜ், செயலாளர் சே.விஷ்ணுவர்தன், கோர்ட் பாலகிருஷ்ணன், கோர்ட் நந்தகுமார், ஆசிரியர் சுரேஷ்குமார், மிலிட்ரி மணி, கிருஷ்ணாபாய், தவக்கண்ணகி, ஆசிரியர் மு.செல்வி, திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், கீழவாளாடி வீ.அன்புராஜா, மண்ணச்சநல்லூர் நகரச் செயலாளர் க.பாலசந்திரன், உடுக்கடி அட்டலிங்கம், விஜி, காயத்ரி, மாலினி, செல்வி, சங்கீதா, அக்சயா, சி.செல்வராஜ், திமுக கிளைச் செயலாளர் வழக்குரைஞர் மா.கண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment