சென்னை, ஜூலை 20 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடு களுக்கான ஒப்பந்தம் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற் கொள்ளப்பட வேண்டிய முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான ஒப்புதல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதுதவிர, பேர வை யில் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோ சனை நடத்தப்பட உள்ளது
No comments:
Post a Comment