சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் புத்தக ஆய்வு, கருத்தரங்கம், பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் புத்தக ஆய்வு, கருத்தரங்கம், பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு

சிதம்பரம், ஜூலை 29- சிதம்பரம்  மாவட்ட  பகுத்தறி வாளர் கழக கலந்துரையாடல்  கூட்டம்  22.07.2023 அன்று  மாலை  06.00 மணிக்கு சிதம்பரம் மாவட்டம் புவனகிரியில்  ஓய்வு பெற்ற தலைமை  ஆசிரியர் 

கோ. நெடுமாறன் இல்லத்தில், அவரது தலைமையில் நடைபெற்றது .

வருகை தந்த அனைவரையும்  வரவேற்று  மாவட்ட செயலாளர் அ.செங்குட்டுவன்  உரையாற்றினார்.

தொடர்ந்து  வருகை தந்த அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

82 வயதிலிருந்து 22 வயது  வரை  உள்ளவர்கள்  பங்கேற்றார்கள்.

இந்த மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தொடக்க உரையை மாநில பகுத்தறிவாளர் கழகத்  துணை தலைவர்  புதுவை கு.இரஞ்சித் குமார் நிகழ்த் தினார்.

பொதுச்செயலாளர்  வி.மோகன் “இந்த கூட்டம் எதற்காக கூட்டப்பட்டது?  இதனுடைய நோக்கம் என்ன?   பகுத்தறிவாளர்கழகம்  எப்படி கட்டமைக்கப்பட வேண்டும்? இதில் இந்த சிதம்பரம் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்தைஎப்படி  எல்லாம்  வளர்த் தெடுப்பது?  எப்படி அதிக உறுப்பினர்களை  சேர்ப்பது? இந்த இயக்கத்தை வலிமையானதாக ஆக்குவதற்கு என்ன செய்யலாம்?  என்ன செய்ய வேண்டும்?”  என்பதை பற்றியும்,  என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்பதை பற்றி வந்திருக்கின்ற பகுத்தறிவாளர்கள் கழக  தோழர்கள் தங்களுடைய  கருத்துகளை  பதிவு செய்யு மாறும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, சந்துரு, முத்துக்குமாரசாமி,  புலவர் ஜெயராமன்,  பெருமாத்தூர் ராமலிங்கம், பேராசிரியர் பாண்டுரங்கன், சுந்தரமூர்த்தி,  அன்பழகன், பேராசிரியர் கலைச்செல்வன், கொ.ந. கவின், மாவட்ட துணைத் தலைவர் திராவிடர் கழகம் பெரியார்தாசன், சிதம்பரம் அமைப்பாளர் செல்வமுத்து, மருவாய் சேகர், பாவேந்தர் விரும்பி, கீரப்பாளையம் பாண்டுரங்கன், வடலூர் தீன மோகன், கீரப்பாளையம் சீ.சரவணன்,பிஎஸெனெல். கு.தென்னவன், வடலூர்  வீர மோகன் , பேராசிரியர் சரவணன் ,ஆகியோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார்கள்.

தொடர்ந்து  கழக மாவட்ட இணை செயலாளர் யாழ் திலீபன், மாவட்ட தலைவர் பூ.சி.இளங்கோவன் ஆகியோர் உரையாற்றினார்கள்.    

பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் “பகுத்தறிவாளர் கழகம் தோற்றம்,கடந்த கால வரலாறு, இயக்க நடைமுறைகள் பற்றி கூறி, அதன் தேவை என்ன? எப்படி செயல்பட்டு வளர்க்க வேண்டும்? அடுத்த தலைமுறையை காப்பாற்றும் கடமை நமக்கு இருக்கிறது.அதனை நிறைவேற்ற நாம் இயக்கத்தை வலுவுள்ளதாக்க வேண்டும்“ என்று கூறி, புதிய மாவட்ட அமைப்பை அனைவரது ஒப்புதலோடு அறிவித்தார். தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக வழிகாட்டு உரையை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் வழங்கினார்.

நன்றியுரை சீ.சரவணன் கூறிட கூட்டம் முடிவுற்றது.

வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை சிறப்பாக நடத்துவது எனவும், இயக்க இதழ்களான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகியவற்றை உறுப் பினர்களிடமும், பொதுமக்களிடமும் கொண்டு செல்வது எனவும், சிதம்பரம் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர்களை சேர்ப்பது எனவும், சிதம்பரம் மாவட்ட  பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாதம் ஒருமுறை சந்திப்புக் கூட்டங்களும், புத்தக ஆய்வு, கருத்தரங்கம்  நடத்திடுவது எனவும் பகுத்தறி வாளர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஒன்றை தக்க இடத்தில் நடத்துவது என எனவும், மாவட்டத்தில் பெரியார் 1000 தேர்வை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

புதிய பொறுப்பாளர்கள்:

மாவட்டத் தலைவர் : கோ.நெடுமாறன்

மாவட்ட செயலாளர் : செங்குட்டுவன்

மாவட்ட அமைப்பாளர் : க.கதிரவன்

மாவட்ட துணைத்

தலைவர் :      பேரா.திருமாவளவன்

மாவட்ட துணைச்

செயலாளர் :     சீ.சரவணன்

ஒன்றிய பொறுப்பாளர்கள்:

புவனகிரி  : ந.அ. இராமலிங்கம்

கீரப்பாளையம் :                பேரா.ப.கலைச்செல்வன்

No comments:

Post a Comment