புதுடில்லி, ஜூலை 31 மக்கள் நலத் திட்டங்களை முறையாக நிறைவேற் றுவதில் புள்ளி விவரங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். புள்ளி விவ ரங்கள் அடிப்படையிலேயே வளர்ச்சியில் உள்ள இடை வெளியைக் கண்டறிந்து முறைப்படி திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும். ஆனால் பாஜக ஆட்சியில் இந்த புள்ளி விவரங்கள் எதுவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. ஆட் சிக்கு வந்த முதல் அய்ந்து ஆண்டு களிலேயே பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அவர்கள் செலவிட்ட பயணச் செலவுகளின் விவரங்கள் பெரும் கேள்விகளை எழுப்பியது.
அதனைத் தொடர்ந்து பாஜக அரசு தொடர்ச்சியாக புள்ளி விவரங்களை கைவிடத் துவங்கியது. பல நேரங்களில் எதிர்க்கட்சிகளின் கேள்வி க்கு புள்ளிவிவரங்கள் இல்லை என்று கைவிரிக்கத் துவங் கியது. இதனாலேயே ‘தரவுகள் இல்லாத அரசு (No data available government)’ என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தன. ஆனால் தற்போது தரவுகளை அழிப்பதில் பாஜக அரசு கவனத்தை செலுத்தி வரு கிறது என்பது தெரிய வந்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் தற்போது மக்கள் தொகை அறிவியலுக்கான பன் னாட்டு நிறுவன (IIPS) இயக்குநர் கே.எஸ்.ஜேம்ஸை அவர் தலை மையில் நடக்கும் ஆய்வுகளில் வரும் புள்ளிவிவரங்கள் திருப்திகரமாக இல்லை என்று கூறி அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
உண்மையில் பாஜக அரசின் குறைகளை புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்தியதாலேயே அவரை இடைநீக்கம் செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பாஜக 2019 ஆம் ஆண்டு திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத இந்தியாவை உருவாக்கு வோம் என்ற வாக்குறுதியைக் கொடுத்து அதை விளம்பரப்படுத்து வதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்து வந்தது. அந்த திட்டம் வெற்றி பெறவில்லை. மேலும் மக்கள் நல நோக்கில் அது செயல்படுத்தப்பட வில்லை. அந்த திட்டத்தின் மூலமாக பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்பட்டன என நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த பரபரப்பிற்கு அடித் தளமிட்டது தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS -5) வெளியிட்ட தரவுகள் ஆகும். இந்தியா முழுவதும் 19 சதவீதமான குடும்பங்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையில்தான் உள்ளார்கள் என்பதை அது அம்பலப்படுத்தியது. இந்த ஆய்வு மோடி அரசின் போலித் தனத்தை அம்பலப்படுத்தியது. மேலும் 2018 ஆம் ஆண்டு போஷன் அபியான் என்ற திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் நோக்கம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை அதிகரித்து ஆண்டு தோறும் ரத்த சோகையை 3 புள்ளிகளாக குறைப் பதே. ஆனால் தேசிய குடும்பநல ஆய்வு-4 (2015-_2016) எடுக்கப்பட்ட பொது இருந்த ஊட்டச்சத்து குறை பாட்டை விட, ஆய்வு-5 இல் அதிகள விலான குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதை அம்பலப்படுத்தியது.
இது போன்று பல்வேறு தரவுகள் மக்களின் புருவங்களை உயர்த்த வைத்தது. திட்டங்களுக்கு பாஜக அரசு ஒதுக்கீடு செய்த பல ஆயிரம் கோடிகளில் ஊழல் நடந் துள்ளது குறித்தான கேள்விகள் எழ துவங்கின. இதன் காரணமாகவே 2019 ஆம் ஆண்டு வேலையின்மை குறித்தான தரவுகளை வெளியிடாமல் முடக்கி வைத்தது. அதுமட்டுமல்ல, வரும் நாட்களில் நடைபெற இருக்கும் தேசிய குடும்ப நல ஆய்வில் ரத்த சோகை குறித்தான விவரங்களை இணைக்க அனுமதிக்கவில்லை.தான் எடுக்கும் புள்ளி விவரங்களே தனது ஆட்சியின் மோசமான நிலையை அம்பலப்படுத்தி விடுவதால் அந்தப் பணியை ஒட்டுமொத்தமாக முடக்கும் பொருட்டே, கே.எஸ். ஜேம்ஸை இடைநீக்கம் செய்துள் ளது என்ற விமர்சனம்எழுந்துள்ளது.
தாமஸ் அய்சக் கண்டனம்
சுகாதாரத்துறையின் முக்கிய அதிகாரியான கே.எஸ்.ஜேம்ஸ் இடைநீக்கம் செய்யப்பட்டது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என மோடி அரசுக்கு கேரள மேனாள் நிதி அமைச்சர் டாக்டர் டி.எம்.தாமஸ் அய்சக் விமர்சித்துள்ளார். “உங்கள் முகம் விகாரமாகத் தெரிந்தால் கண்ணா டியை குற்றம்சாட்டுங்கள். அதைத் தான் மோடி செய்து கொண்டிருக் கிறார். 19% பேர் திறந்த வெளியை இன்னும் கழிப்பிடமாக பயன்படுத் துகின்றனர். 40% பேருக்கு சுத்தமான சமையல் எரி பொருள் கிடைக்கவில்லை. ரத்த சோகை அதிகரிப்பு என ஆய்வு விவரங்களை தேசிய சுகாதார குடும்ப ஆய் வறிக்கை வெளி யிட்டது. அந்த ஆய்வை வெளியிட்ட அமைப்பின் இயக்குநர் தான் கே.எஸ்.ஜேம்ஸ். அதற்காகத்தான் அவர் பழிவாங்கப் பட்டுள்ளார்” என தாமஸ் அய்சக் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment