மாற்றுத்திறனாளி மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

மாற்றுத்திறனாளி மாணவர், மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இரு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு ஆணை

சென்னை, ஜூலை 22 - தமிழ் நாட்டில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகையை இரு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசுஅறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட் டங்களை மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வரு கிறது. மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 2013-2014ஆ-ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் 1-ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்கும் மாணவர்க ளுக்கு அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்றவாறு கல்வி உதவித் தொகை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.7,000 வரை வழங்கப்பட்டு வந்தது. 

முதலமைச்சர் அறிவிப்பு: 

இந்நிலையில் 2023--2024ஆ-ம் நிதியாண்டுக் கான மாற்றுத்திறனாளி கள் நலத்துறையின் மானி யக் கோரிக்கையின்போது முதலமைச்சர், ‘மாற்றுத் திறன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையை இருமடங் காக உயர்த்தி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக் கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2,000 ஆகவும், 6 முதல் 8ஆ-ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களுக்கு ரூ.3,000 என்பதை ரூ.6,000 ஆகவும், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4,000 என்பதை ரூ.8,000 ஆக வும் உயர்த்த உத்தர விடப் பட்டுள்ளது. 

அதேபோல், இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்க ளுக்கு ரூ.6,000 என்பதை ரூ.12,000 ஆகவும், முது கலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.7,000 என்பதை ரூ.14,000 ஆக வும் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் சிறப்புக்கல்வி பெறும் மாற்றுத் திற னாளி மாணவ, மாண விகளுக்கு கல்வி நிலையை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாற்றுத் திற னாளி மாணவ, மாணவிக ளுக்கு இந்த உதவித் தொகையைப் பெறுவ தற்கு பள்ளி தலைமை யாசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இவ் விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நலஅலுவலர் மூலம் பரிசீலனை செய் யப்பட்ட பின் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment