தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக புலம் பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக புலம் பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு

7

சென்னை, ஜூலை 7 - தமிழ் நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகி றது. வெளிமாநிலங்களான ஒடிசா, பீகார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

தரவுகள் கிடைப்பதில் சிக்கல்

குறிப்பாக, கட்டுமானம், ஓட்டல் தொழில்களில் அதிகளவில் வடமாநிலத்தவர் ஈடுபட்டு வரு கின்றனர். இதுதவிர, பலர் சிறு தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே, தாக்குதல் சம்பவங்கள், விபத்துகள் நிகழ்தல், அரசின் சிறப்பு வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றின் போது வெளி மாநில தொழிலாளர்கள் எவ்வ ளவு பேர் தமிழ் நாட்டில் உள்ளனர் என்ற தரவு கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும், வெளிமாநில தொழிலாளர் கள் குறித்த கணக்கெடுப்பை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இதற்கென இணையதள வசதி தொடங்கப் பட்டு அதில் பதிவு செய்ய வேலை யளிப்போருக்கும், தொழிலாளர் களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டுள்ளது.

இதுதவிர, தொழிலாளர் துறை நேரடி கணக்கெடுப்பு நடத்தும் முயற்சியையும் எடுத்துள்ளது. தொழிலாளர்களின் புலம் பெயர்வு செயல்முறைகளை புரிந்து கொள் வது, அவர்கள் செய்யும் வேலை மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலையை அறிந்துகொள்வது போன்ற நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

7 மாதங்களில் முடிக்கப்படும்

குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான கணக் கெடுப்பும் அனைத்து மாவட்டங்க ளிலும் மேற்கொள்ளப்படுகிறது. 7 மாதங்களில் கணக்கெடுப்பை முடித்து தரவுகளுடன் பரிந்துரை களை அளிக்கவும் தொழிலாளர் நலத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments:

Post a Comment