உள்ளிக்கடை, ஜூலை 21- பாபநாசம் ஒன்றியம் சார்பாக வைக்கம் நூற்றாண்டு விழா - மற்றும் "திரா விட மாடல்" விளக்க தொடர் தெருமுனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன் சார்பாக ஏழாவது கூட்டமாக பாபநாசம் ஒன்றியம் உள்ளிக்கடை சுதர்மன் தெருவில் 20.7.2023 மாலை மாவட்ட செயலாளர் சு.துரைராசு தலை மையில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் சு. கலியமூர்த்தி, மேனாள் மாவட்ட துணை செயலாளர் ஆ.பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் து. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கிளைக் கழக பொறுப்பாளர் குணசேகரன் வரவேற்புரை ஆற் றினார்.
கூட்டத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் வ.அழகுவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் க.திருஞான சம்பந்தம், பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன், அய்யம்பேட்டை நகர தலைவர் வெ.இராவணன், நகர செயலா ளர் வை.அறிவழகன், பொறுப் பாளர்கள் 'சோ' கணேசமூர்த்தி, கார்த்திகேயன், உம்பளாபாடி கழக பொறுப்பாளர் சா. வரத ராசன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் கோவி. பெரியார் கண்ணன், ஒன்றிய கழக துணை செயலாளர் க. ஜனார்த்தனன், பாபநாசம் நகர துணை செயலாளர் வி.மதிவா ணன், ஆகிய தோழர்கள் கலந்து கொண்டார்கள்.
தலைமைக் கழக அமைப் பாளர் குடந்தை க. குருசாமி தொடக்க உரை ஆற்றினார்.
இந்திய நாடு சுதந்திரம் பெற் றதற்குப் பின்னால் தமிழ் நாட்டை ஆட்சி செய்த முதல மைச்சர்கள் பட்டியலை விளக்கி யும், அவர்களில் நினைவில் நிற் பவர்கள் யார் என்பதையும் எடுத்துச் சொல்லி "திராவிட மாடல்" விளக்கத்தைக் கூறி கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வம் சிறப் புரையாற்றினார்.
கூட்டத்தில் உள்ளிக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment