தஞ்சை, ஜூலை 29- தஞ்சை மாநகரம், மருத்துவக் கல்லூரி பகுதியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
26.07.2023 அன்று மாலை 6 மணியளவில், தஞ்சை மாநகர திராவிடர் கழக சார்பில் நடைபெற்ற இத்தெரு முனைக் கூட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் பா.விஜயக்குமார் வரவேற்புரையாற்றினார். மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர் த.கோவிந்தராஜ் தலைமையேற்று உரையாற்றினார்.
தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட தொழிலாளரணி செயலாளர் செ.ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தொடக்க வுரையாற்றினார். கழக பேச்சாளர் பூவை.புலிகேசி சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தின் தொடக்கத்தில் க.சுடர்வேந்தன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை நடத்தினார். தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு வைக்கம் போராட்டத்தினை விளக்கி பாடல்களை பாடினார். பேராசிரியர் சு.பாஸ்கர் கலைஞர் பற்றிய கவிதை வாசித்தார்.மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.இராஜவேல் நன்றியுரையாற்றினார்.
மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண் டியன், தஞ்சை மாநகர ப.க. செயலாளர் இரா.வீரக்குமார், தெற்கு நத்தம் எழிலரசன், மகளிரணி தோழர் சுசீலா, தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார்செல்வம், 49ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் (தி.மு.க.) க.கலையரசன், மருத்துவக் கல்லூரி பகுதி தி.மு.க. செயலாளர் சதா மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment