"பிரதமர் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும்!" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

"பிரதமர் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும்!"

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடில்லி, ஜூலை 20 மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பிரதமர் நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறி முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (20.7.2023) முதல், வருகிற ஆகஸ்ட் மாதம்  11 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரச் சினைகள் பற்றி ஆலோசிப்பதோடு,  கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத் துழைப்புத் தர வேண்டும் என ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  

இந்த நிலையில், இன்று (20.7.2023) நாடாளுமன்றம் தொடங்கியவுடனே, மணிப்பூர் விவகாரம் தொடர் பாக எதிர்க்கட்சிகள் பிரதமர் நேரில் வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். மேலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஒத்தி வைப்புத் தீர்மானத்தையும் கொண்டுவந்தனர். ஆனால் நடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கம் விளைவிக்க முயன்றதாகக்கூறி நாடாளுமன்ற இரு அவைகளும், தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும், மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment