குஜராத் அரசின் மதவெறி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 4, 2023

குஜராத் அரசின் மதவெறி!

பக்ரீத் கொண்டாட்டத்தில் ‘குல்லாய்’ அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்

கட்ச், ஜூலை 4- பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதி யில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பக்ரீத்தை முன்னிட்டு சிறிய அளவில் விழா கொண்டாடப் பட்டது. 

இந்த விழாவில் முஸ்லிம் மாண வர்களுடன் ‘குல்லாய்’ அணிந்து மற்ற மாணவர்களும் நடனமாடி யுள்ளனர். 

இதன் காட்சிப்பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி மத நல் லிணக்கத்தின் எடுத்துக்காட்டு என பாராட்டு குவிந்தது. 

ஆனால் மத வெறுப்பை வைத்தே குஜராத்தில் 23 ஆண்டு கள் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு, இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பள்ளியில் பக்ரீத் விழா நடத்தியது மற்றும் இசுலாமியர் அல்லாத மாணவர் களுக்கு ‘குல்லாய்’ அணிவித்தது மிகப் பெரிய குற்றம் எனக் கூறி  மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சஞ்சய் பர்மர் மூலம்  அந்த தனியார் பள்ளியின் முதல்வரை பணியிடைநீக்கம் செய்துள்ளது. 

இதுகுறித்து கட்ச் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் சஞ்சய் பர்மர், “இந்து மாணவர்களை முஸ்லிம்கள் அணியும் “இஸ்லாமிய குல்லா” அணியச் சொல்வது கீழ்த் தரமான செயல்” என ஒரே ஒரு கருத்தோடு மேற்கொண்டு எதுவும் கூறாமல் செய்தியாளர்களிடமி ருந்து நழுவிக் கொண்டார்.

No comments:

Post a Comment