நீலகிரி, ஜூலை 27 மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று (26.7.2023) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர் மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதியை நிலை நாட்டவும் வலி யுறுத்தி நெல்லியாளம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பந்தலூர் அருகே தேவாலாவில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லி யாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணிப் பூரில் கலவரத்தை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், நிர்வாகிகள் அனீஷ், பிரபு, ஜோனி, வின்சன்ட், சவுக்கத், சந்திரன், ஹரீஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும், அங்குள்ள முதலமைச்சர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேற்று (26.7.2023) நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை தொகுதி சார்பில் பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரசார் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், மாநில வழக்குரைஞர் அணி இணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள். இதில் கலந்து கொண்ட வர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
இதேபோல் நெல்லை சட்டமன்ற தொகுதி சார்பில் நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந் தியம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டியில் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவரும், அரகண்டநல்லூர் பேரூ ராட்சியின் மேனாள் தலைவருமான ஏ.ஆர்.வாசிம்ராஜா தலைமை தாங்கி மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட மகளிர் அணி தலைவர் ரீட்டாலதா பீட்டர், பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், வட்டார தலைவர் பாவாடை, மேனாள் வட்டார தலைவர் பழனி, மாவட்ட செயலாளர் தாயு மானவர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முருகன், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மாவட்ட துணை தலைவர் வெள்ளியங்கிரி, மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம்
திண்டிவனம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த மெழுகுவத்தி ஏந்திய ஆர்ப்பாட்டத்திற்கு திண்டிவனம் நகர தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். நகர துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் வெங்கட், ஜானகிராமன், நகர செயலாளரும், வழக்குரைஞருமான அஜீஸ், வழக்குரைஞர் பொன் ராஜா, ஊடகப் பிரிவு ஜெய்கணேஷ், டோமினிக் சேவியர், கலியபெருமாள், தில்குமார், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டு மணிப்பூர் அரசை கண்டித்து வழக்குரைஞர் எழுப்பியபடி, கலவரத்தில் இறந்தவர்களுக்கு மெழுகுவத்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி
. மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் குழித்துறை சந்திப்பில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமை தாங்கினார். ராஜேஷ் குமார் சட்டமன்ற உறுப்பினர் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர், இதில் குழித்துறை நகர காங்கிரஸ் கட்சி தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர்கள் பால்ராஜ், பினில் முத்து, ஆஸ்கர் பிரடி, மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி. லாரன்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதலைக் கண்டித்தும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசுபதவி விலகக் கோரியும் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (26.7.2023) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத் திற்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தின் போது கையில் மெழுகுவத்தி ஏந்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட் டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அய்க்கிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
விராலிமலை
இதேபோல் விராலிமலை சோத னைச்சாவடியில் பா.ஜ.க. அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் தலைமையில் மெழுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் மணிப்பூர் கலவரத்தை கண்டித் தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி மேனாள் பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment