மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விளைவு! பூஜையின் பெயரால் 48 சவரன் நகை, பணம் பெற்று மோசடி: சாமியார் தலைமறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

மூடநம்பிக்கையால் ஏற்பட்ட விளைவு! பூஜையின் பெயரால் 48 சவரன் நகை, பணம் பெற்று மோசடி: சாமியார் தலைமறைவு

விருதுநகர், ஜூலை 23 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சொக் கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குரு சாமி என்பவர் தன்னை சாமியார் எனக் கூறிக்கொண்டு, தான் வாசியோக பயிற்சி கற்றுத்  தருவதாக கூறியும், பூஜைகள் செய்வதாகவும் கூறி பெண் கள் உள்ளிட்ட பலரிடமும்  பணம், நகைகளைப் பெற்றுக்கொண்டு தலை மறைவானார் என்கிற தகவல் வெளி யாகியுள்ளது.

 அருப்புக்கோட்டையில் நகைளை வைத்து பூஜை செய்தால் “அருளும் பொருளும்“ கிடைக்கும் என ஏமாற்றி பலரிடமும் பணம் மற்றும் நகைகளைப் பெற்றுக்கொண்டமோசடி சாமியார் தலைமறைவானார். இதில் அதிக பாதிப்பு பெண்களுக்குத்தானாம். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர் மகாலட் சுமி (வயது 63). இவர் தட்டச்சு நிலைய ஆலோசகராக உள்ளார். இவரிடம் டிரஸ்ட் துவங்க பணம் வேண்டு மெனவும், சிறிது காலம் கழித்து பணத்தை திருப்பித் தருவதாகவும் கூறி யுள்ளார். இதை நம்பிய மகாலெட்சுமி ரூ.6லட்சம் பணத்தை பல தவணைகளில் குருசாமியிடம் தந்தாராம். மேலும்,  நகை வைத்து பூஜை செய்தால் “அரு ளும்  பொருளும்“ கிடைக்கும் என ஆசை வார்த்தையை கூறியுள்ளார். இதனை நம்பிய மகாலட்சுமி 9 சவரன் தங்க நகையை கொடுத்துள்ளார். பின்பு,  48 நாள்கள் கழித்து நகையை கேட்டுள் ளார். அப்போது, மோசடி சாமியார் குருசாமி, தீர்த்தயாத்திரை சென்று வந்த  பின்பு நகையை தருவதாக கூறியுள்ளார். ஆனால், நகையையும், பணத்தையும் திரும்பத் தரவில்லை. 

மேலும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி மொத்தம்  ரூ.15.35 லட்சம் ரொக்கப் பணத்தையும், 48 சவரன் தங்க நகைகளையும் வாங்கி ஏமாற்றி விட்டு குருசாமி தலைமறைவாகி விட்டாராம். எனவே, பணம் மற்றும் நகைகளை மீட்டுத் தரக் கோரி மகாலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோசடி சாமியார் குருசாமியைத் தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment