சென்னை, ஜூலை 22 - '4 மாதத்தில் 4200 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப் படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறைகள் திறப்பு விழா அய்யப்பன் தாங்கல் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 27 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாட்டில் 4200 புதிய பேருந்து கள் 4 மாதத்தில் நடைமுறைக்கு வர உள்ளது. டபுள் டக்கர் பேருந்து இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிந்த பின் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
விலைவாசி உயர்வு குறித்து பா.ஜ.க கூட்டணியில் உள்ள அ.தி.மு.கவினர் பா.ஜ.கவை கண்டிக்காமல் அவர் கள் கட்சியின் இருப்பை காட்டுவதற்காகப் போராட்டம் நடத்துகின்றனர்" என்றார்.
அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் மேனாள் அமைச்சர் திண் டுக்கல் சீனிவாசன் மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல மைச்சர் ஆக்குவோம் எனக் கூறியது குறித்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன்," திண்டுக்கல் சீனிவாசன் கூறியது உண்மை தான்" என்றார்.
No comments:
Post a Comment