அம்பேத்கர் உருவப்படம் அகற்றம் - சென்னையில் நாளை (24.7.2023) வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனப் போராட்டம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

அம்பேத்கர் உருவப்படம் அகற்றம் - சென்னையில் நாளை (24.7.2023) வழக்குரைஞர்கள் சங்கம் கண்டனப் போராட்டம்

சென்னை,ஜூலை 23-  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த (7.7.2023) சுற்றறிக்கை காரணமாக பல கீழமை நீதிமன்றங்களில் அவசர கோலத்தில் "பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர்"  உருவப் படங்கள் அகற்றப்பட்டுள்ளது மிக வேதனை தருவது. மேற்படி சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களுக்கும், ஏனைய சக நீதிபதிகளுக்கும் கோரிக்கைகள் வெளிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.  நாளை திங்கள்  (24.7.2023) மதியம் 1.30 மணிக்கு  "ஆவின்" அருகில் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக  மேற்படி உயர்நீதிமன்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம் நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment