இதுதான் குஜராத் மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

இதுதான் குஜராத் மாடல்!

மனுவாதி நீதிபதிகள்! பாலியல் வன்கொடுமையால் சிறுமி கர்ப்பம் ஆவதெல்லாம் சர்வ சாதாரணமாம்!

மனுநீதியை எடுத்துக்காட்டி தீர்ப்பு

அகமதாபாத், ஜூன் 9 பாலியல் வன்கொடுமையால் சிறுமி  கர்ப்பமாவது எல்லாம் சாதாரணமானதுதான். மனு ஸ்மிரு தியை படியுங்கள் தெரியும் என்று குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி  தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்!

14, 15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், 17 வயதில் குழந்தை பெறுவதும் சாதாரணமானது என்று வழக்கு ஒன்றின் விசாரணையின்போது குஜராத் நீதிமன்ற நீதிபதி கூறி, நல்லபடியாக குழந்தையைப் பெற்று தத்துக் கொடுக்க அறிவுரை வழங்கினார்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 16 வயது மைனர் சிறுமியின் 7 மாத கருவை கலைக்க அனுமதி கோரி அந்தச் சிறுமியின் தந்தை குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி சமீர் ஜே.டேவ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின் போது தான் 14-15 வயதில் திருமணம் செய்து கொள்வதும், அதைத் தொடர்ந்து 17 வயதை அடைவதற்குள் குழந்தை பெறுவதும் கடந்த காலங்களில் சாதாரணமானதுதான் என்று நீதிபதி தெரிவித்தார்.

‘மனுஸ்மிருதியைப் படியுங்கள்!'

இந்த வழக்கு விசாரணையின்போது, "நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது பாட்டியிடம் கேளுங்கள். அப்போதெல்லாம் (திருமணம் செய்ய) அதிகபட்ச வயதே 14-15 வயது தான். 17 வயதிற்கு முன்பே குழந்தை பிறந்து விடும். ஆண்களுக்கு முன்பே பெண்கள் முதிர்ச்சியடை கிறார்கள். 4-5 மாதங்கள் என்பதெல்லாம் பெரிய வித்தி யாசம் இல்லை. மனுஸ்ம்ருதியில் இதைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். இதை ஒருமுறை படியுங்கள்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதேநேரம் கருவுக்கு 7 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியுமா என்பது குறித்து அவர் தனது அறையில் மருத்துவர்களுடன் ஆலோசித்ததாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், வழக்கின் சூழலைக் கருத்தில் கொண்டு, ராஜ்கோட் மருத்துவமனையின் மருத்துவர் அந்தச் சிறுமிக்கு மருத் துவப் பரிசோதனையை நடத்த உத்தரவிட்டார்.

மேலும், அந்தச் சிறுமிக்கு ஆசிஃபிகேஷன் பரிசோத னையை நடத்துமாறும், மனநல மருத்துவரிடமும் பரிசோதனை செய்து அந்த அறிக்கையை பெறுமாறும் மருத்துவர்கள் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 நீதிபதி மேலும் கூறுகையில், "இந்த சோதனைகளை நடத்தி, அதன் முடிவுகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.. கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பது நல்லதுதானா என்பது குறித்து மருத்துவர்கள் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மருத்துவ ரீதியாக கரு எப்படி இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் தேவை" என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சிறுமிக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி பிரசவம் நடக்கலாம் என மருத்துவர்கள் கூறுவதால், வழக்கை முன்கூட்டியே விசாரிக்குமாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார். அதற்கு நீதிபதி, "தாய் அல்லது கருவில் உள்ள குழந்தைக்கு ஏதேனும் கடுமை யான நோய் இருந்தால், இந்தக் கோரிக்கையை நிச்சயம் பரிசீலனை செய்வோம். அதேநேரம் இருவரும் நலமாக இருந்தால் கருவை கலைக்க அனுமதிப்பது கடினம்" என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், கருவைக் கலைக்க உத்தரவிட்டாலும், அந்த செயல்முறையில் 7 மாத கரு உயிருடன் பிறக்கும் சாத்தி யம் குறித்தும் நீதிமன்றம் கேட்டுள்ளது. மேலும், சிறுமிக்கு நல்ல முறையில் பிரசவம் பார்த்துத் தத்துக் கொடுக்கும் வழிகள் குறித்தும் பரிசீலனை செய்யுமாறு சிறுமியின் தந்தை தரப்பிற்கு நீதிமன்றம் அறிவுரை கூறியது.

சட்டம் என்ன கூறுகிறது? 

கருக்கலைப்பு மருத்துவச் சட்டத்தின் படி, கருக் கலைப்புக்கான உச்சவரம்பு 24 வாரங்கள் ஆகும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தால் பெண்ணின் உயிருக்கு அல்லது மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கருதினால் கருவைக் கலைக்க அனுமதி தரப்படும். இருப்பினும், நீதிமன்றம் தனக்கு இருக்கும் பரந்த அதிகாரங்களைக் கொண்டு, பாலியல் வன் கொடுமை போன்ற சில அரிய வழக்குகளில் 24 வாரங் களுக்கு மேலும் கர்ப்பத்தை கலைக்க அனுமதி தர முடியும்.


No comments:

Post a Comment