கனியின் நிலையை அளக்கும் கருவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 8, 2023

கனியின் நிலையை அளக்கும் கருவி

கிடங்கில் வைத்துள்ள காய்கள், கனிந்துள்ளனவா? இதை கண்டறிய மனிதக் கண்கள், மூக்கு, கைகள் தான் இன்னமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த, 21ஆம் நுற் றாண்டில் கூட, ஒவ்வொரு சுளை யையும், ஒவ்வொரு குலை யையும், பழுத் திருக்கின்றனவா என்று சோதிக்க, நம்பகமான தொழில் நுட்பங்கள், இன்னும் பரவலாக வில்லை.

அண்மையில் தான், ஜப் பானைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இதற்கு தீர்வினை கண்டறிந் துள்ளனர். மாங்காய், வாழை போன்ற கனிகளை, கையால் தொடாமல், லேசர் மற்றும் பிளாஸ்மா அதிர்வலைகள் மூலம், துல்லியமாக பழுத்திருப்பதை கண் டறிய முடியும் என, அவர்கள் நிரூபித்துள்ளனர்.

மாம்பழத்தின் மீது, அதிதிறன் லேசர் கதிரை பாய்ச்சினால், தோலுக்கு அடியில் பிளாஸ்மா குமிழ்கள் உருவாகும். அக்குமிழ் களின் மீது, ‘லேசர் டோப்ளர் வைப்ரோமீட்டர்’ கருவியின் அதிர்வலைகள் பட்டுத் திரும்பும் போது, பழத்தின் காய் மற்றும் கனிந்த தன்மையை தெரிந்து கொள்ள முடியும்.

ஜப்பான் விஞ்ஞானிகளுக்கு, இது ஆரம்ப கட்ட வெற்றி தான். மாங்கனி, உள்ளே கெட்டிருந் தாலோ, வண்டு துளைத்திருந் தாலோ, லேசர் கதிர்களின் கணிப்பு தவறாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, இக்கருவியின் துல்லி யத்தை மேலும் கூட்ட, ஆய்வுகள் தொடர்கின்றன.


No comments:

Post a Comment