உண்மை அம்பலத்திற்கு வந்தது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

உண்மை அம்பலத்திற்கு வந்தது!

பெயரளவிற்குக் கூட அழைப்பிதழ் வைக்கவில்லை

குடியரசுத் தலைவர் மாளிகை தகவல்

புதுடில்லி, ஜூன் 25-  புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுதலைவருக்கு பெயரளவில் கூட அழைப்பிதழ் வழங்கவில்லை என்று தகவல் உரிமை சட்டத்தின் முலம் கேட்கப்பட்ட கேள்விக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளது.

பழைய நாடாளுமன்ற கட்ட டம், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஆகையால் புதிய நாடா ளுமன்ற கட்டடம் கட்ட முடிவு செய்த ஒன்றிய அரசு, ராஜபாதை சீரமைப்பு, துணை குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், ஒன்றிய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டியுள்ளது.

சென்டிரல் விஸ்டா திட்டத் தின் ஒரு அங்கமாக கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020ஆ-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நாடாளுமன்ற புதிய கட்டடத் தின் பணிகள் நிறைவடைந்தை தொடர்ந்து கடந்த மே மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி அதனை திறந்து வைத்தார். அந்த நாடாளுமன்றத்தில் தமிழர் களின் அடையாளமான செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழா வில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், புதிய நாடாளு மன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடி யரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. புதிய நாடாளு மன்ற கட்டடத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்ட யாரும் அழைப்பு விடுக்கவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி யின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட கேள்விக்கு குடியரசுத் தலைவர் மாளிகை பதில் அளித் துள்ளது.

நிகழ்ச்சியின் அழைப்பிதழ் துணைக் குடியரசுத் தலைவருக்கு ஓம் பிர்லா நேரில் சென்று வழங் கியது செய்தியாக வெளியான நிலையில் அவருக்கும் மேலே இந்தியாவின் முதல் குடிமகள் என்ற பெருமைமிகுந்த பதவியைப் பெற்ற குடியரசுத்தலைவருக்கு பெயரளவிற்கு கூட அழைப்பிதழ் வைக்கவில்லை என்பது மிகவும் வேதனை தரும் செய்தியாகும்.

No comments:

Post a Comment