நாட்டு நலப்பணித் திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 25, 2023

நாட்டு நலப்பணித் திட்டம்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக யோகா தினம் - 2023 விழிப்புணர்வு நிகழ்வு


வல்லம். ஜூன்.25- - பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உலக யோகா தினம் - 2023 முன்னிட்டு விழிப் புணர்வு நிகழ்ச்சி 21.06.2023 அன்று பல்கலைக்கழகத்திலுள்ள வளாகத் தில் நடைபெற்றது.

உடல் ஆரோக்கியத்தோடும் எண்ணங்களை ஒரு முகப்படுத்த வும், மன அமைதியை நிலைப்படுத்த வும் யோகா பயிற்சி பேருதவியாக உள்ளது. 

இதனைப் போற்றும் வகையி லும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'உலக யோகா தினம்' பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நாட்டுநலப்ப பணித் திட்டத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு நாட்டு நலப்பணித் திட்ட 10 அலகுகளின் சார்பில் 21.06.2023 அன்று பல்வேறு யோகா பயிற்சி மற்றும் விழிப் புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து சிறப்பாக அரங்கேற்றப்பட்டு, சுமார் 600 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் நாட்டுநலப் பணித் திட்ட தொண்டர்கள், பெற்றோர் கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சிறப்பாக யோகா பயிற்சி மற் றும் விழிப்புணர்வை சம்பந்தமாக தஞ்சை யோகா பயிற்சியாளர் வழங் கினர். இந்நிகழ்ச்சியில் பல் கலைக்கழக துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி மற்றும் பேரா. பி.கே.சிறீவித்யா பதிவாளர் ஆகி யோர் கலந்துகொண்டு வாழ்த் துரை வழங்கினார்கள். 

முனைவர் டி.ரமேஷ், உடற் கல்வி துறை மற்றும் முனைவர் டி.மகேஷ்குமார், துறைத் தலைவர், முனைவர் எம்.சர்மிளா பேகம், துறைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக, நிகழ்ச்சியில் பேரா. சந்திரகுமார் பீட்டர்,  நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணப்பாளர் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் ஏற் பாடு செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment