பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-நீடாமங்கலத்தில் கழகத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 11, 2023

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-நீடாமங்கலத்தில் கழகத் துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்

நீடாமங்கலம், ஜூன் 11 - மன்னார்குடி கழக மாவட்டத்தின் சார்பில் இன்று (11.6.2023) நீடாமங்கலம் கலைஞர் அறிவா லயத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்றை நடைபெற்றது. 

“தந்தை பெரியார் ஓர் அறிமுகம்“ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பினை எடுத்து பயிற்சியினை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் ஆசிரியரணி மாவட்டத் தலைவர் த.வீரமணி வரவேற்புரை ஆற்றி£ர். பயிற்சிப்பட்டறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் ஆகியோர் துவக்கி வைத்துப் பேசினர். 

பேச்சாளர் வழக்குரைஞர் சிங்காரவேலு கழகப் பாடலை துவக்கத்தில் பாடினார். ப.க. மாவட்டத் தலைவர் வை.கவுதமன், ஆசிரியரணி மாவட்டச் செயலாளர் இரா.கோபால், நீடா ஒன்றியச் செயலாளர் ச.அய்யப்பன், நீடா ஒன்றியத் துணைத் தலைவர் இரா.சக்திவேல், மாவட்ட கழக அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், பகுத்தறிவு ஆசிரியரணி மண்டல அமைப்பாளர் சி.இரமேஷ், மன்னை ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல் வன், இளைஞரணி மாவட்டச் செயலாளர் வ.இளங் கோவன், மாவட்டத் துணைத் தலைவர் இன்பக்கடல், பூவனூர் அனந்தராமன், மன்னார்குடி அழகேசன், ப.க. நீடா நகரத் தலைவர் வா.சரவணன் ஆகியோர் பங் கேற்றனர். 

பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். “கடவுள் மறுப்புத் தத்துவம் ஒரு விளக்கம்“ என்ற தலைப்பில் முனைவர் க.அன்பழ கன், “சமூக ஊடகங்களில் நமது பங்கு” என்ற தலைப்பில் மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம், “சமூகநீதி வரலாறு” என்ற தலைப்பில் கோ.கருணாநிதி, “தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனை” என்ற தலைப்பில் பேரா.நம்.சீனிவாசன் ஆகியோர் வகுப்பு நடத்தினர்.

முன்னதாக மறைந்த நீடாமங்கலம் நகர கழகத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

No comments:

Post a Comment