8.10.1953 அன்று பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் அய்தராபாத் (டெக்கான்) திரு.பிங்கள் எஸ்.ரெட்டி அவர்களை வரவேற்ற போது, திராவிட தத்துவத்தின் அடையாளமாக இரு தாமரை மொக்குகளை கவர்னர் ஜெனரலுக்கு அளித்தார்.
சி.ஆரும், எறும்புகளும்
அண்மையில் கோவையில் சென்னை முதலமைச்சர் திரு.சி.ஆர். அவர்கள் திராவிடர் கழகத்தை எறும்புகளுக்குச் சமமாக ஒப்பிட்டு எறும்புகளைப் போல் அடிக்கடி தொல்லை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது பற்றி திரு.ரெட்டி அவர்கள் கூறியது.
"உலகில் வாழும் உயிர்களிலே மிகவும் சுறுசுறுப்பும் கஷ்டப்பட்டு உழைக்கும் தன்மையும் வாய்ந்தது எறும்பு. "அவைகளைத் துன்புறுத்தாத வரை அவைகள் எவரையும் துன்புறுத்துவதில்லை. மிகக் கஷ்டப்பட்டு உழைக்கக் கூடிய இனத்தவர்."
"திராவிடர்கள் எறும்புகள் என்றால், திராவிடம் ஒரு பெரிய எறும்புப் புற்றுக் குன்று; அங்குள்ள பிராமணர்கள் எல்லாம் நல்ல பாம்புகள்; திரு.ராஜகோபாலாச்சாரியார் நல்ல பாம்புகளின் அரசன். அதன் மீது ஆரியக்கடவுள் மகாவிஷ்ணு பள்ளி கொண்டுள்ளார்."
"பலவந்த மைன ஸர்ப்பமு சால சீமல சேத சிக்கி சாவடே சுமதி" எனத் தெலுங்கில் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது, "மிகப் பலம் பொருந்திய நாகப்பாம்பும் எறும்புகளிடம் அகப் பட்டுக் கொண்டால் இறந்து விடுகிறது" என்பதாகும்.
எனவே, காலம் கடப்பதற்கு முன், "இந்த நல்ல பாம்புகள் எறும்புக் குன்றை (திராவிடத்தை) விட்டு வெளியேறி விடும்" என நம்புகிறேன்.
- 'விடுதலை', 22.10.1958
No comments:
Post a Comment