புதுடில்லி, ஜூன் 4 அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல் பாடு அனை வரையும் ஆச்சரியப் படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேஷனல் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த செய்தி யாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:
"அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் ஒன்றிணைந்துள்ளன. மேலும், அடிமட்டத்தில் பல நல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்று மறைந்துகிடக்கும் வலுவான அடிப்படை கட்ட மைப்பு நடவடிக்கைகளால் காங் கிரஸ் கட்சி வரும் பொதுத் தேர் தலில் அனைவருக்கும் ஆச்சரியப் படுத்தும் விதத்தில் முடிவுகளை உருவாக்கும். சட்ட அமலாக்க நிறு வனங்கள், ஊடகம், மத சுதந்திரம், சிறுபான்மை உரிமைகள், பொரு ளாதாரம் ஆகிய அனைத்தும் இந்தியாவில் கவலை அளிக்கும் நிலையில் உள்ளன. இவற்றில், மத்திய அரசு அதிகாரத்தை குவித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. நாட்டின் ஜன நாயக கட்ட மைப்பை பாதுகாக்க சுதந்திரமான மற்றும் நடுநிலை யான அமைப்புகள் அவசியம்."
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
No comments:
Post a Comment