தஞ்சை, ஜூன் 11- 10.06.2023 அன்று காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், இராமசாமி திருமண மண்டபத்தில் திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா நிகழ்வில் மாவட்ட காப்பாளர் மு.அய்யனார் தலைமையேற்று உரையாற்றினார். மாநகர தலைவர் பா.நரேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குண சேகரன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறையை தொடங்கிவைத்து உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பெரியாரியல் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்.
தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் இப்பயிற்சி பட்ட றைக்கான முழு ஏற்பாடுகளையும் செய்து, நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
கடவுள் மறுப்பு தத்துவம்
- ஒரு விளக்கம்
திராவிடர் கழக மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தினை மாணவர்கள் - இளைஞர்கள் புரிந்து கொள்ளும்படி பல்வேறு எடுத்துக் காட்டுகளைக் கூறி விடயபுரத்தில் தந்தை பெரியார் கூறிய ‘கடவுள் மறுப்பு' தத்துவத்தின் வரலாற்று நிகழ்வு, அதனால் ஏற்பட்ட மாற்றங்கள், ஏன் கடவுளை மறுக்க வேண்டும், கடவுள் நம்பிக்கையால் ஏற்படும் இழப்புகள், கடவுள் மறுப்பால் அடையும் பயன்கள் என்பன போன்ற பல்வேறு விளக்கங்களை கூறி வகுப்படுத்தார்.
மனித நேயத்தின் மறுஉரு பெரியார்
திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியாரின் தலையாயக் கொள்கை மனித நேயமே என்பதை சுட்டிக்காட்டி பேசிய தன்னுடைய வகுப்பில், நாலு பேருக்குதொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தனது சொத்துக்களை எல்லாம் விட்டு, குடும்பத்தை விட்டு பெரியார் ஆற்றிய தொண்டின் காரணமாகத்தான் இன்றைக்கு நாம் மிகப்பெரிய அறிவு வளர்ச்சியை பெற்றிருக்கிறோம். பார்ப்பனர் ஒழிய வேண்டும் என்று தந்தை பெரியார் என்றைக்குமே கூறியது இல்லை. அவர் சொன்னதெல்லாம் பார்ப்பனியம் ஒழிய வேண்டும், பார்ப்பனிய ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பவை தான். 97 சதவீதம் இருக்கக்கூடிய திராவிட மக்களை மூன்று சதவீதமே இருக்கும் பார்ப்பனர்கள் இன்றைக்கும் அடிமைப்படுத்துகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் அறிவு வளர்ச்சி அல்ல, அவர்கள் கொண்டுள்ள சூழ்ச்சியே, வஞ்சகமே, என்பதை மக்களிடையே எடுத்துக் கூறி காலமெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை அறிவு பெறச் செய்த மனித நேயத்தின் மறுஉரு தந்தை பெரியார் என்று தனது வகுப்பினை சிறப்பாக நடத்தினார்.
தேசியக் கல்விக் கொள்கை
- ‘நீட்' நுழைவு தேர்வு எதிர்ப்பு ஏன்?
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரசு பெரியார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இன்றைய சூழலில் ஒன்றிய அரசால் திணிக்கப்படும் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை குழிதோண்டி புதைக்கும் வஞ்சகச் செயலான தேசிய கல்விக் கொள்கை, நீட் நுழைவு தேர்வு போன்றவற்றை ஏன் எதிர்க்கிறோம் என்பதை எடுத்துக் கூறி, அவற்றால் தமிழ்நாட்டு மாணவர்கள் அடையும் பாதிப்புகளையும் இழப்பீடுகளையும் இன்றைக்கு இருக்கிற இளைய தலைமுறை அறிந்து கொள்ளும்படி சிறப்பு வகுப்படுத்தார்.
சமூக ஊடகங்களில் நமது பங்கு
திராவிடர் கழக மாநில தொழில் நுட்ப அணி அமைப்பாளர் திருச்சி வி.சி.வில்வம் அவர்கள் சமூக ஊடகங்களில் திராவிட இயக்க கொள்கைகளை பரப்பும் பணியினை இளையதலை முறையினர் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை விளக்கிக் கூறி, சமூக ஊடகங்களின் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ளும் வகையில், அவற்றை எவ்வாறு கையாள வேண்டும், எதையெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும் என்பவற்றை விளக்கி வகுப்பு நடத்தினார்.
அவரைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி யூடியூப் சேனல் தொடங்குவது குறித்தும் அதில் நாம் எவ்வாறு செயலாற்ற வேண்டும், நம் முடைய கருத்துப் பிரச்சாரம் எவ்வாறு அமைய வேண்டும், பயனுள்ள வகையில் சமூக ஊடகங்களை எப்படி பயன்படுத்தலாம் போன்ற பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறி வகுப்பெடுத்தார்.
சமூக நீதி வரலாறு
திராவிடர் கழக வெளியுறவுத்துறை செயலாளர் கோ.கருணாநிதி நீண்ட நெடிய வரலாறான சமூக நீதியின் வரலாறு குறித்து நீதிக் கட்சி தொடங்கி இன்றைய நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையிலான திராவிடர் கழகம் வரை இந்த சமூக நீதி பரிணமித்த பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ளும் வகையில் ஒளி, ஒலி சாதனங்களுடன் வகுப்பெடுத்தார்.
தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்
பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன், பெண்ணுரிமை என்றால் - என்ன, என்ன உரிமைகள் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கேள்வி கேட்டு, தந்தை பெரியார் கூறிய ஆணுக்குள்ள உரிமை அனைத்தும் பெண்ணுக்கும் வேண்டும் என்ற சிந்தனையை எடுத்துக் கூறி, இச்சமு தாயத்தில் வாழும் பெண்களுக்கு இன்றைக்கு வழங்கப்படும் உரிமைகளுக்காக, தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் பேசிய பேச்சுக்கள் எழுதிய எழுத்துகள் எண்ணற்றவை என்பதை விளக்கி வகுப்பெடுத்தார்.
திராவிடர் கழகம் ஏன்?
பெரியாரியல் பயிற்சி பட்டறையை தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்து நடத்தி வரும் திராவிடர் கழக மாநிலப் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றிருக்கும் மாணவர்கள் இளைஞர் களிடையே மாலை நேரத்தில் பயிற்சிப் பட்டறையின் வகுப்புகள் முடிவுற்ற நிலையில் திராவிடர் கழகம் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பொதுக்கூட்டங்களின் வாயிலாக இத்தனை பணிகளை இந்த மக்களுக்காக ஏன் செய்ய வேண்டும் என்பதை இளையதலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் பகுத்தறிவு பெற, மூடநம்பிக்கை ஒழிய, மனிதநேயம் மலர, பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரே அமைப்பு திராவிடர் கழகம். தந்தை பெரியார் அளித்த சிந்தனைகளை அனைத்து மக்களுக்கும் அறியச் செய்யும் பெறும் பணியை செய்வதுதான் திராவிடர் கழகம். தந்தை பெரியாரின் சிந்தனைகளை மாணவர்கள் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி உரையாற்றினார்.
இறுதியாக திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி பெரியாரிகள் பயிற்சிப் பட்ட றையில் வகுப்பெடுத்த பெருமக்களுக்கும் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் இளைஞர்களுக்கும், இந்த நிகழ்வினை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திய கழகப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
வகுப்பை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுத்த மூன்று மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு புத்த கங்கள் பரிசாக வழங்கப்பட்டது. முதல் பரிசு விடுதலை அரசி, இரண்டாவது பரிசு தமிழிசை, மூன்றாம் பரிசு அமளி ஆகி யோருக்கு தஞ்சை மாநகர அமைப்பாளர் சே.தமிழ்ச்செல்வன் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காப்பாளர் ஜெயராமன், மாநில ப.க. ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க. துணை தலைவர் கோபு.பழனிவேல், பெரியார் சமூக காப்பணி இயக்குநர் தே.பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட துணை செயலாளர் உத்திராபதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாநில இளைஞரணி துணை செயலாளர் முனைவர் வே.ராஜவேல், மாநில வீதி நாடகக் கலை குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை ஸ்டாலின், பூதலூர் ஒன்றிய தலைவர் அள்ளூர் பாலு, செயலாளர் ரெ.புகழேந்தி, தஞ்சை மாநகர ப.க. செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ச.அஞ்சுகம், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் அ.கலைச்செல்வி, மாவட்ட ப.க. துணைத் தலைவர் பெரியார் கண்ணன், சாளியமங்கலம் வை.ராஜேந் திரன், மாநகர அமைப்பாளர் செ. தமிழ்ச்செல்வன், அம்மன் பேட்டை கலியபெருமாள், மாவட்ட ப.க. செயலாளர் ச. அழ கிரி, எம்.எஸ். கலியபெருமாள், மாவட்ட ப.க. துணை செய லாளர் ஆ.லெட்சுமணன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் இரா.இளவரசன், கண்ணை கிளைக்கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜதுரை, மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா.இராமகிருஷ்ணன், உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, திருவோணம் ஒன்றிய ப.க. அமைப்பாளர் நாகநாதன், மாவட்ட வழக்குரைஞரணி செயலாளர் க.மாரிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் இர.மணிகண்டன், மாவட்ட மாணவர் கழக செயலாளர் ச.சிந்தனையரசு, உரத்தநாடு பாலகிருஷ்ணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணை தலைவர் அ.பெரியார் செல்வம், ஒக்கநாடு மேலையூர் தன்மானம் மற்றும் கழக பொறுப் பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றியம் மற்றும் கிளை கழக வாரியாக பயிற்சிப் பட்டறையில் பங்கெடுத்த மாணவர்கள் இளைஞர்கள்
No comments:
Post a Comment