90 வயது கொலையாளிக்கு ஆயுள் தண்டனை
ஆக்ரா, ஜூன் 4 உத்தரப்பிரதேச மாநிலம் ஷிகோ ஹாபாத் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சத்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 10 தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த போது ஷிகோஹாபாத் மெயின்புரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், மெயின்புரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக் கல் செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் 1989-இல் ஃபிரோசா பாத் மாவட்டம் உரு வான பிறகு, ஷிகோஹாபாத் ஃபிரோசாபாத் மாவட்டத்தின் பகுதியாக மாறி யது. ஆனாலும், இந்த வழக்கின் விசாரணை மெயின்புரி நீதிமன்றத் தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த வழக்கு ஃபிரோ சாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்ந்து 42 ஆண்டுகளைக் கடந்த நிலையில் குற்றம்சாட்டப் பட்ட 10 பேரில் 9 பேர் இறந்து விட்டனர். எஞ்சியிருந்த கங்கா தயாள் (90) மட்டும் விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் 1.5.2023 அன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கங்கா தயாள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை யடுத்து அவருக்கு ஆயுள் தண் டனை விதிக்கப்படுகிறது. மேலும், கங்கா தயாளுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று மாவட்ட நீதிபதி ஹர்வீர் சிங் தீர்ப்பு அளித்தார்.
No comments:
Post a Comment