தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - 1500 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 10, 2023

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - 1500 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

சென்னை, ஜூன் 10 - தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12ஆம் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 14ஆம் தேதியும் தொடங்க உள்ளன. கோடை விடு முறைக்கு குழந்தைகளுடன் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்க ளுக்கு திரும்பி வருவதற்கு வசதியாக அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந் துகளை இயக்க உள்ளது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப் படுவதையொட்டி 10ஆம் தேதி (இன்று), 11ஆம் தேதி (நாளை) ஆகிய இரு தினங்களும் கூடுதல் பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்களின் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 சிறப்பு பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து வெவ்வேறு பகுதிகளுக்கு 850 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 1,500 சிறப்பு பேருந்துகளை இயக்கிட திட்டமிடப் பட்டுள்ளது. எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக் கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்ட மிட்டு, முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

 இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திருச்சியில் இருந்து முன்பதிவு செய்யாத பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து சேவை யினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை திட்டமிட்டு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment