சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேனாள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைஞர் அவர்களின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே பீடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் படத் திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் சென்னியப்பன், சி.வெற்றிச் செல்வி, இறைவி, முத்துசெல்வி, தங்க தன லட்சுமி, தங்கமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தே.ஒளி வண்ணன் (மாவட்ட செயலாளர், திரு வொற்றியூர்), பெரியார் யுவராஜ் (தென் சென்னை இளைஞரணி அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (தென் சென்னை தலைவர்), செ.ரா.பார்த்தசாரதி (தென்சென்னை செயலாளர்), தளபதி பாண்டியன் (வட சென்னை தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை செயலாளர்), ப.முத்தையன் (தாம்பரம் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் செயலாளர்), அரும்பாக்கம் தாமோதரன், அமைந்தகரை அருள்தாஸ், காப்பாளர் வெ.ஞானசேகரன், வாசகர் வட்ட பொருளாளர் ஜனார்த்தனன், உடுமலை வடிவேல், மு.ரெங்கநாதன், கலைமணி, யுகேஸ், ரவீந்திரன், முத்து லெட்சுமி, அருள் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment