ஆர்.எஸ்.எஸ் சின் ஆழமும் அகலமும்" எனும் பெயரில் தமிழில் கனகராஜ் பாலசுப்பிரமணியம் என்பவர் மொழி பெயர்த்துள்ளார்.
தற்பொழுது கருநாடகாவில் பி.ஜே.பி கட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே ஆர்.எஸ்.எஸ் சின் உயிர் எங்குள்ளது? என வினவும் “RSS: Aala Mattu Agala” எனும் நூல் கன்னடத்தில் 10 லட்சம் பிரதிகள் வரை விற்கப்பட்டுள்ளது எனும் செய்தி நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்த்துத்துவா சிந்தனைகளுக்கு எதிரான வலுவான பிரச்சாரத்தினை கருநாடகம் நடத்தியுள்ளது என்பது நமக்கு நம்பிக்கை அளிக்கிறது
இந்நூல் ஆர்.எஸ்.எஸ் குறித்து மிகச்சரியாக மக்களை எச்சரிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் சின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை பட்டியலிட்டு அதற்கு பின்னாலிருக்கும் குறுகிய மதவெறி கருத்துகளை, பாசிச சிந்தனைகளை அம்பலபடுத்துகிறது. இந் நூலை கன்னட மொழிக்கான சாகித்திய அகாடமி விருதை பெற்ற தேவனூர மகாதேவா எனும் எழுத்தாளர் எழுதியுள்ளார். ஒரே நேரத்தில் ஆறு பதிப்பகங்களுக்கு அச்சிடும் உரிமையினை கொடுத்து இந்நூலுக்காக எவ்வித இராயல்டியும் பெற்றுக் கொள்ளாமல் அதிக பிரதிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை மட்டும் அவர் உறுதி செய்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் இந்நூல் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது...
எமர்ஜென்சி காலத்தில் நிலவிய சர்வாதிகாரத் தையும் தற்பொழுது நிலவும் சர்வாதிகாரப் போக் கையும் மிகத் துல்லியமாக வேறுபடுத்தி இந்நூலில் எடுத்துக் காட்டியுள்ளார் தேவனூர மகாதேவா.
"காங்கிரசின் இந்திரா காந்தியும் சிறிது காலம் சர்வாதிகாரியாக இருந்தார். அவருடைய சர்வாதி காரம் என்பது நிர்வாக அடிப்படையிலான சர்வாதி காரம் மட்டுமாகத் தான் இருந்தது. இந்தியாவின் அந்த சிறிதுகால சர்வாதிகாரத்தில் நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் தற்பொழுது இருப்பது போல் செயலிழந்து இருக்கவில்லை. இன்றைய மோடி ஆட்சியில் நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகத்துறை, தன்னாட்சி நிறுவனங்கள் அனைத்தும் மூச்சுவிடக் கூட திணறுகின்றன. ஆர்.எஸ்.எஸ் சின் கனவு ஆட்சி அனைத்து துறைகளையும் விழுங்கிக் கொண் டிருக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால், கட்சி, சமூகம், கலாச்சாரம், நிர்வாகம் அனைத்துக்கும் ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்னும் நிலைப்பாடு. இது தான் சர்வ சர்வாதிகாரம்! இதை நாம் மறந்து விடக் கூடாது."
அதே போல் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அறிவுரை ஒன்றை மிகவும் கவித்துவமாக சொல்லி யுள்ளார்.
"முதலில் நமக்கொரு விழிப்புணர்வு வேண்டும். என்னவென்றால், சிதைவே உயிர்மூச்சாக உள்ள ஆர்.எஸ்.எஸ் சின் மோகினி பிசாசு கும்பல் நம் வீடுகளின் முன் நின்று "வா" என்று கூவும் பொழுது அதற்கு பதிலளிக்காமல் "நாளைக்கு வா" என்று நாமும் நம் நாட்டுப்புற வழக்கைப் போல் கதவுகளில் எழுத வேண்டும். நாம் அவர்களுக்கு *"ஓ"* என்று பதிலளித்தால், அதனுடன் பேச்சுக் கொடுத்தால், நம் அழிவு அந்த நொடியிலிருந்தே தொடங்கும். கிராமங்களின் பட்டறிவான "சிதைவே பேய்... ஒற்றுமையே கடவுள்" எனும் விவேகம் நமக்குள்ளும் வர வேண்டும்."
இப்படி ஆர்.எஸ்.எஸ். மீது நேரடியாக தாக்கு தலை தொடுக்கும் இப்புத்தகத்தை "ஆர்.எஸ்.எஸ் சின் ஆழமும் அகலமும்" எனும் பெயரில் தமிழில் பாரதி புத்தகாலாயம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
-கோ.கருணாநிதி
No comments:
Post a Comment