மாற்றம்
ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு மாற்றப்பட்டு, டிவி அறிவியல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ராஜஸ் தானை சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் சட்டத்துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வைப்புத் தொகை
மின் கட்டணத்துக்கான போதிய வைப்புத் தொகை இருப்பில் இல்லாதவர்களுக்கு தாக்கீது அனுப்பி மின் வாரியத்தின் வருவாய்ப் பிரிவின் தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் உத்தரவு.
உயர்த்தி...
ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.
தொப்பி
போக்குவரத்து களப்பணியில் உள்ள காவலர்கள் அனைவரும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், வெப்பத்தைத் தடுக்கும் தெர்மா கோல் தொப்பி அணிய வேண்டும் எனப் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சுரத்கர் உத்தரவு.
நிறுவ திட்டம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் 18 ரயில் நிலையங்களில் நவீன தொழில்நுட்பம் கொண்ட மிகப் பெரிய மின் விசிறிகளை நிறுவ ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அறிமுகம்
சென்னை அய்அய்டியும் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் பல்கலைக்கழகமும் இணைந்து டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடத்தில் கூட்டு முழுநிலை பட்டப்படிப்பை வழங்குகின்றன.
அவகாசம்
பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆய்வில் 775 கடைகளில் எடையளவு உள்ளிட்டவை தொடர்பான விதி மீறல்கள் இருந்ததாகவும், விதிப்படி உரிய எடையளவுகளை பயன்படுத்தாவிட்டால் சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத் துறை எச்சரிக்கை.
புதிய கோள்
சூரிய மண்டலத்துக்கு வெளியேயுள்ள தென்பகுதி விண்மீன் தொகுப்பில் 90 ஒளி ஆண்டுகள் தூரத்தில் ஒரு கோள், சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருப்பதை அமெரிக்காவின் ஹார்வர்டு பல் கலைக் கழகம் மற்றும் சுமித் னோனியன் நிறுவனத்தின் வான இயற்பியல் மய்ய விஞ்ஞானிகள் குழு கண்டு பிடித்துள்ளது. இதற்கு எல்பி 791-18 என பெயரிடப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment