தமிழ்நாட்டில் அய்ந்து டிகிரி வெப்பம் அதிகரிக்கும் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

தமிழ்நாட்டில் அய்ந்து டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

 சென்னை, மே 19 சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (19.5.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 20, 21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் நாளையும் (மே 19, 20) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 102 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

No comments:

Post a Comment