பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் "பெரியார் பிஞ்சு" பழகு முகாம் தொடங்கியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் "பெரியார் பிஞ்சு" பழகு முகாம் தொடங்கியது!

தஞ்சை, மே 2. பெரியார் மணியம்மை அறி வியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ‘பெரியார் பிஞ்சு' பழகு முகாமை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து உரையாற்றினார்

பெரியார் பிஞ்சு பழகு முகாம் தொடக்க நிகழ்வு பல்கலைக் கழகத்தின் அய்ன்ஸ்டீன் அரங்கில் 2-5-2023 காலை 10:30 மணி அளவில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உதவி பேராசிரியர் சித்ரா அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். 

பேராசிரியர் பர்வீன் பழகு முகாமின் வரலாற்றை சுட்டிக்காட்டி, நல்லொழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தினார். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேலுச்சாமி பெரியார் பிஞ்சுகளை வாழ்த்தி வரவேற்றார்.  பதிவாளர் முனைவர் சிறீவித்யா, திராவிடர் கழக பொதுச் செயலா ளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், பேராசிரியர் நம் சீனிவாசன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு  என்னா ரெசு  பெரியார், பேராசிரியர் சுமதி, கோபு பழனிவேல், பெரியார் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்து  சிறப்பித்தனர்

முகாமில் இதுவரை 73 பெரியார் பிஞ்சு கள் கலந்து கொண்டுள்ளனர். சிறார்கள் 37 சிறுமிகள் 36. கடந்த முறை கலந்து கொண்ட பிஞ்சுகளில் 30 பேர் மீண்டும் கலந்து கொண் டுள்ளது குறிப்பிடத்தக்கது. 6.5.2023 வரை பெரியார் பிஞ்சு பழகு முகாம் நடைபெறும்.


No comments:

Post a Comment