அங்கம், வங்கம், கலிங்கம், கௌசிகம்,
சிந்து, சோனகம், திரவிடம், சிங்களம்,
மகதம், கோசலம், மராடம், கொங்கணம்,
துளுவம், சாவகம், சீனம், காம்போசம்,
அருணம், பப்பரம் எனப் பதினெண் பாடை. (162)
இவற்றுள் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் தோன்றிய திவாகரமே இன்று கிடைக்கும் நிகண்டுகளுள் பழமையானதாகும். இதனை வரலாற்று ஆராய்ச்சியாளர் கி.பி.9ஆம் நூற்றாண்டினைச் சார்ந்தது என்றே பெரிதும் தீர்மானிக்கின்றனர். திவாகரர் சமண முனிவர் என்றும் சைவப் பெரியார் என்றும் இரு வேறு கூற்றுக்கள் உள்ளன. கி.பி. 1839இல் தாண்டவராய முதலியார் அவர்களே பழைய ஏட்டுச் சுவடிகளிலிருந்து முதல் பத்துத் தொகுதிகளைக் கொண்ட திவாகர நிகண்டினைப் பதிப்பித்தார். அடுத்த ஆண்டில் (கி.பி. 1840இல்) எஞ்சிய இரண்டு தொகுதிகளுடன் சேர்த்து அவரைப் பின்பற்றி இராமசாமிப்பிள்ளை பதிப்பித்தார்.
அதன் பின்னர் பலர் திவாகரத்தை முழுமையாகவும் சில சில பிரிவுகளை மட்டும் பதிப்பித்து வந்துள்ளனர். அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. திவாகரரை ஆதரித்த வள்ளல் சேந்தன் பெயரையும் சேர்த்து இந்நூல் 'சேந்தன் திவாகரம்' என்றும் பெயர் பெற்றுள்ளது. கி.பி. 1839, 1840இல் வெளிவந்த தாண்டவராயப் பிள்ளை அவர்களின் பதிப்பையே இத் திவாகரப் பதிப்பு ஆதாரமாகக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment