சென்னை,மே25- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டண மில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்து களிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பய ணம் செய்யலாம் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசுப் பேருந்து களில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணமில்லை என்ற அறிவிப்பை அமல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்து களில் அரை டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொள்ளலாம் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன் னதாக, 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே பேருந் துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப் பட்டிருந்தது.
No comments:
Post a Comment