புதுடில்லி, மே 27- இந்திய குடிமைப் பணிக்கானத் தேர்வில் வெற்றி பெற்ற 933 பேரில் மாற்றுத் திற னாளிகள் 41 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஒன்றிய பணியாளர் தேர்வா ணையம் யுபிஎஸ்சி நடத்தும் அய்ஏஎஸ் (இந்திய ஆட்சிப் பணி), அய்பிஎஸ் (இந்திய காவல் பணி), அய்எஃப்எஸ் (இந்திய வெளியுறவு பணி) மற்றும் குரூப்-ஏ, குரூப்-பி பணியிடங்களுக்கான குடிமைப் பணிகளுக்கானத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு (பிரிலிமினரி), முதன்மைத் தேர்வு (மெயின்) மற்றும் ஆளுமைத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படு கிறது.
இதில் முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி நடத்தப்பட்டு, அதே மாதத்தில் தேர்வு முடிவுகளும் வெளியிடப் பட்டன. முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 16 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 6-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. இறுதித் தேர்வான ஆளுமைத் தேர்வு கடந்த 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் கடந்த 23.5.2023 அன்று வெளியிடப்பட்டது.
இதில் அனைத்து வகுப்பினரும் போட்டியிடக்கூடிய பொதுப் பிரிவில் 345 பேர், பொருளாதா ரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினர் (ணிகீஷி) 99 பேர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ளிஙிசி) 263 பேர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் (ஷிசி) 154 பேர், பழங்குடியினர் (ஷிஜி) 72 பேர் என மாற்றுத்திறனாளிகள் 41 உள்பட மொத்தம் 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய யுபிஎஸ்சி பரிந்துரைத்தது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சுராஜ், ரயில் விபத்தில் தனது வலது கை, இரண்டு கால்களை இழந்த நிலையிலும், மனம் தள ராமல் யுபிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த சுராஜ், கடந்த 2019ஆம் ஆண்டு காசியா பாத்தின் தாத்ரி பகுதியில் நடந்த ரயில் விபத்தொன்றில் சிக்கி தனது வலது கை, இடது கையில் இரண்டு விரல்கள், இரண்டு கால்களையும் இழந்தவர். கை, கால்களை இழந் தாலும் தன்னம்பிக்கையை இழக் காமல், குடிமைப் பணித் தேர்வுக் குப் படித்து, தேர்வெழுதி வெற்றி பெற்று அய்.ஏ.எஸ். ஆகியிருக்கிறார்.
No comments:
Post a Comment