நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 25, 2023

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 12இல் ஏவப்படும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008இல் சந்திராயன்-1 விண்கலத்தை அனுப் பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நில வில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன்-2 திட் டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. 

இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான்-2 விண்கலம் உருவாக் கப்பட்டது. இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற் றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதி செயலிழந்தது. 

அதேநேரம், விண்கலத்தின் மற் றொரு பகுதியானஆர்பிட்டர் நில வின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந் நிலையில் சந்திர யான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல் படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இந்த விண்கலம் ஜூலை 12-ஆம் தேதி விண்ணில் ஏவப் பட உள்ளதாக தகவல்கள் கிடைத் துள்ளன. 

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:

நிலவு பற்றிய ஆய்வுக்கு தென் துருவத்தில் தரையிறங்க வேண் டியது அவ சியம். அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர் கலன்கள் வடி வமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை விண்கலத் தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சந்திரயான்-2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12ஆ-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-2போல அல்லாமல் 42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் கலன் ஆகஸ்ட் 22ஆ-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல் வேறு விவரங்கள் வெளியுலகுக்கு தெரியவரும். இதற் கிடையே என்வி எஸ்-2 எனும் வழிகாட்டுதல் செயற் கைக் கோளும் ஜிஎஸ்எல்வி மார்க்- 3 ராக்கெட் மூலம் மே 29ஆ-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின் றன. இவ் வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment