ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதியில் `நமக்கு நாமே' திட்டத்தில் மக்கள் பங்களிப்பு இனி 20% ஆக இருக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 12, 2023

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வாழும் பகுதியில் `நமக்கு நாமே' திட்டத்தில் மக்கள் பங்களிப்பு இனி 20% ஆக இருக்கும்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை

சென்னை, மே 12 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்களின் பங்களிப்புத் தொகையை 20 சதவீதமாக குறைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய உட்கட்டமைப்புகளை உரு வாக்குவதிலும், பராமரிப்பதிலும் பொதுமக்களின் சுயஉதவி நடை முறையை மேம்படுத்தவும் மற்றும் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கிலும் 2021-ல் 'நமக்கு நாமே' திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில், நீர்நிலைப் புனர மைப்புப் பணிகள் தவிர்த்து, மற்ற பணி களுக்கு பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் 3-இல் ஒரு பங்காக இருக் கும். நீர்நிலை சீரமைப்புப் பணிகளுக்கு மக்களின் குறைந்தபட்ச பங்களிப் பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீதமாகும். எனினும், மக்களின் பங்களிப்புக்கு உச்சவரம்பு ஏதுமில்லை.

'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, இதற்கான பொதுமக்களின் பங்களிப் புத் தொகை ரூ.151.77 கோடி.

இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 2,568 பணிகள் தொடங்கப்பட்டு, 1,446 பணிகள் முடிக் கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2022 ஜனவரி 7ஆ-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பொதுமக்களின் பங்களிப்பு 3-இல் ஒன்று என்பதை,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு 5இ-ல் ஒரு பங்காக மாற்றி, விதிகள் தளர்த்தப்படும்’’ என்று அறிவித்தார்.

இதன்படி,  'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், குறிப்பிடப் பட்ட பகுதியின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் கூடுத லாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி யினரின மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந் தப் பணிக்கும், மக்களின் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையை, பணி மதிப் பீட்டுத் தொகையில் 5-இல் ஒரு பங்கு, அதாவது 20 சதவீதம் என்ற அளவுக்கு குறைத்து முதலமைச்சர்  உத்தரவிட்டுள் ளார். எனினும், மக்கள்பங்களிப்புக்கான உச்சவரம்பு ஏதுமில்லை. இதனடிப் படையில், திட்ட வழிகாட்டு நெறிமுறை களுக்கு உரிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் அதிக அளவிலான பொதுமக்களின் பங்கேற்பை ஊக்கு வித்து, இப்பகுதிகளுக்கு அதிக உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment