ஒசூர், ஏப். 19- ஒசூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டம் பகுத்தறிவாளர் கழகம் மாவட்ட அமைப்பாளர் தோழர் வசந்தசந்திரன் அலுவலக வளாகத்தில் 16.4.2023 அன்று மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முன்னுரையாக மாநில ப.க.துணைத் தலைவர் அண்ணா சரவணன் உரையாற்றியபின் அனைவரும் தங்களை அறிமுகம்செய்தனர்.
தொடர்ந்து திராவிடர்கழக பொதுக் குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, ப.க.மாவட்ட செயலாளர் சிவந்தி அருணாசலம், தோழர் வசந்தசந்திரன், தமிழ்மணி,ப.க.மாநகர தலைவர் பேரரசன், தர்மபுரி மண்டல ஆசிரிய ரணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர் மாரிகருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் மோகன் ஆகியோர் உரையாற்றியபின் மாநில தலைவர் இரா.தமிழ்செல்வன் பகுத்தறி வாளர் கழகத்தின் நோக்கம் அவற்றை வளர்க்க வேண்டிய அவசியத்தையும் நாம் அனைவரும் எவ்வாறு பகுத்தறி வாளர் கழகத்தை கட்டியமைக்க வேண் டும் என்பதை விளக்கி மாவட்டத்தில் விரைவில் 100 உறுப்பினர்களை இணைத்து இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மக்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டு மாய் கேட்டு கொண்டு வந்திருந்த புதிய தோழர்களை பாராட்டி அவர்களுக்கு பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
தொடர்ந்து புதிய பொறுப்பாளர் களை அறிவித்தார். மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம், மாவட்ட செய லாளர் செ.பேரரசன், மாவட்ட அமைப் பாளர் வசந்த் சந்திரன், காப்பாளர் தமிழ்மணி, துணைத்தலைவர் வே. ரமேஸ்வரன், துணைச் செயலாளர் ஜெ.ஜெயசந்தர், மாநகர தலைவர் பொறி.ஜெகநாதன், செயலாளர் ராக வேந்திரன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரி யரணி அமைப்பாளர் ஆசிரியர் ஞான சுந்தரி, மாவட்ட கலைதுறை அமைப் பாளர் மனோகரன் ஆகியோரை அறிவித்து அவர்களுக்கு பயனாடை அனி வித்து வாழ்த்துகளை தெரிவித்தார். இறுதியாக ப.க. மாவட்ட செயலாளர் செ.பேரரசன் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment