சீர்திருத்த திருமணம்!! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

சீர்திருத்த திருமணம்!!

17

அடுக்குமொழி

அலங்காரம்

இல்லை!


எதுகை

மோனை

பொருத்தம்

எதுவும் இல்லை!


அசையும் இல்லை!

மங்கல

இசையும் இல்லை!


நேர மாத்திரை

பார்க்கவில்லை!


தாலி எனும்

வேலி இல்லை!


வெண்பா எனும்

வேள்வியில்லை!


மரபெனும்

மந்திரம் இல்லை!


ஆரிய தரு

தளையும் இல்லை!


தோரண

தொடையும்

இல்லை!


ஜாதி மறுப்புக்கு

தடையுமில்லை!


யாப்பு எனும்

காப்பில்லை!


புதுக்

கவிதையாய்

மேடைக்கு வந்தார்

புது

மாப்பிள்ளை!


ஆம்! இது

பெரியாரின்,

சீர்... வரிசை இல்லா

சீர்திருத்த

திருமணம்!!


- கவிஞர் சிற்பி சேகர், பட்டுக்கோட்டை


No comments:

Post a Comment