கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடிய புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 30, 2023

கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடிய புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா




காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், ஏப். 30- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆவது பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில், 29.4.2023 காலை 10.00 மணியளவில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. 

தமிழ்நாடு அரசு விருது பெற்ற கவிஞர் கூரம். துரை தலைமை வகித்தார்.  இசைப் பாவலர் சாட்டை நந்தன் தமிழிசைப் பாடல்களை மிகச் சிறப்பாகப் பாடினார்.  

மாவட்ட அரசு வழக்குரைஞர், கவிஞர் ஆ.க. ரமேஷ்,  மேனாள் வட்டாட்சியர் கவிஞர் ஆ. பார்த்த சாரதி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். திருக்குறள் பேரவையின் மாணவர்கள் திருக்குறள் பாடினர்.  

கவிஞர் சிந்தை வாசன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இருபால் கவிஞர்கள் கவிதை பாடினர்.  

முனைவர் கவிஞர் தாமரை பூவண்ணன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  முனைவர் காஞ்சி பா. கதிரவன், நாத்திகம் நாகராசன், அ.வெ. முரளி, குறள் அமிழ்தன், பாஸ்கரன், துணை வட்டாட்சியர் அரி, வட்டாட்சியர் பூபதி முதலியோர்  பகுத்தறிவு, மொழி,  ஜாதி மறுப்பு, மத மறுப்பு,பெண்ணுரிமை, தொழிலாளர் நலன் முதலிய கருத்துக்களை புரட்சிக் கவிஞரின் வழி நின்று அவர் பாடல்களை எடுத்துக் காட்டி உரை யாற்றினர்.  

ஆசிரியர் 'பாக்கம் தமிழன்' எழுதிய திருக்குறள் தெளிந்த உரைக்கு சித்தமருத்துவர் விஜயபாபு மதிப் பாய்வு  உரை வழங்கினார்.  ஆசிரியர் பாக்கம் தமிழன் ஏற்புரை நிகழ்த்தி அனைவருக்கும் தம் "திருக்குறள் தெளிந்த உரை" நூலை  வழங்கினார். 

விழாவின் நிறைவாக, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.  அவர் தம் உரையில்,  தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், முத்தமிழறிஞர் கலைஞர் இவர்க ளெல்லாம் தமிழுக்கும் தமிழருக்கும் ஆற்றிய தொண்டு கள் குறித்தும்,  தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய  தொண்டுகள் குறித்தும் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றினர்.  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.   

விழாவில் பங்கேற்ற கவிஞர் மு.ஜெகனாதன்  நன்றி கூறினார். 

தென்காசி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர்வே.ஜெயபாலன் தலை மையில் உலகத் தமிழர்களின் ஒருமித்த குரல் புரட்சிக் கவிஞரின் 133ஆம் ஆண்டு பிறந்தநாளன்று (29.4.2023) புரட்சிக்கவிஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி

29.4.2023 மாலை புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராஜன் தலைமை தாங்க மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைப் பொதுச் செயலாளர் இளவரசி சங்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல தலைவர் வே.அன்பரசன் முன்னிலை வகிக்க மாநில தலைவர் சிவ. வீரமணி புரட்சிக் கவிஞர் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். 

நிகழ்ச்சியில் தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகளின் நிறுவனத் தலைவர் இரா. மங்கையர் செல்வன் "பாவேந் தரின் பார்வையில் சனாதனம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இறுதியில் கே.குமார் நன்றி  கூற கருத் தரங்கம் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment