விழுப்புரம், ஏப். 30- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திரா விடர் தொழிலாளரணி சார்பாக 29.04.2023 அன்று விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ. கோபண்ணா வரவேற்றார். விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்கபரணிதரன். விழுப்புரம் மாவட்ட ப.க அமைப்பாளர் கி.கார்வண்ணன், மண்டல இளை ஞரணிச் செயலாளர் த.பகவான் தாஸ். விழுப்புரம் நகர செயலாளர் ச.பழனிவேல் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தொழிலாளரணி மாநில மாநாட்டில் பெருந்திரளாக கலந்துகொள்வ தென தீர்மானிக் கப்பட்டது. மாநாட்டிற்கு நிதி திரட்டி தருவதெனவும் தீர்மானிக் கப்பட்டது.
மாதந்தோறும் கலந்துரையா டல் கூட்டமும், தெரு முனை பிரச் சாரக்கூட்டமும் நடத்துவதென தீர்மானிக்கப் பட்டது. இக்கூட் டத்தில் விழுப்புரம் மாவட்ட இளை ஞரணி தலைவர் அ. சதீஷ், திருநாவலூர் ஒன்றியச் செயலா ளர் க. செல்வகுமார், விழுப்புரம் மாவட்ட இளைஞரணி செயலா ளர் ஜெ. வசந்த்குமார், பெரியார் பிஞ்சு ச. அத்தீட்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங் கினர்.
இறுதியாக விழுப்புரம் மாவட்ட பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய அமைப்பாளர் சு. செல்வி மற்றும் விழுப்புரம் மண்டல இளைஞரணிச் செயலா ளர் த. பகவான்தாஸ் நன்றி கூறி னர். இக்கூட்டத்திற்கு திராவிடர் கழகம் மற்றும் தோழமை கட்சித் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment