சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் வைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 13, 2023

சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் வைப்பு

சென்னை, ஏப். 13- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சி காலத்தில் அவருடைய கோரிக் கையை ஏற்று, சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில், 1989ஆம் ஆண்டு அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டபோது, அண்ணா மற்றும் காமராஜர் பெயர் பலகைகள் அகற்றப்பட்டது.இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் மீண்டும் தலைவர்களின் பெயர்களை வைக்க அரசியல் கட்சிகளும் பிற அமைப்புகளும் கோரிக்கை வைத்து வந்தனர். விமான நிலையம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், விரிவாக் கப் பணிகள் முடிந்ததால் மீண்டும் அண்ணா மற்றும் காமராஜர் பெயர் பலகைகளை கொண்டுவருமாறு டி.ஆர்.பாலு எம்.பி. அறிவுறுத்தினார்.

மேலும் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, மீனம்பாக்கம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அந்த கட்டடத்தில் அண்ணா பன்னாட்டு முனையம் எனவும், உள்நாட்டு முனையத்தில் காமராஜ் உள்நாட்டு முனையம் எனவும் மீண்டும் பெயர் பலகைகளை, தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் பெயர் வைத்தி ருந்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு விமான நிலைய முனையங்களுக்கு மீண்டும் தலைவர்களின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதால் மக்களினிடையே பெரும் வரவேற்பு கிடைக்கிறது.

No comments:

Post a Comment