ரெய்டுகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 29, 2023

ரெய்டுகளைக் கண்டு அஞ்ச மாட்டோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

16

சென்னை, ஏப்.29- ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண் மையில் இந்த நிறுவனம் மீது பல் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுக தலைமை முக்கியப் பிரமுகர் களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதய நிதி ஸ்டாலின், ‘வருமான வரித் துறை சோதனை நடத்துவதன் மூலம் திமுகவை அச்சுறுத்த முடி யாது. தி.மு.க. மீது வைக்கப்படும் குற்றச் சாட்டுகளை தகர்த்தெ றிந்துவிட்டு பணியாற்றி வருகி றோம்.

 அய்.டி. ரெய்டுகளுக்கெல்லாம் அஞ்ச முடியாது. சிலர் தி.மு.க.வை வாழ்த்துவது இல்லை, குற்றச் சாட்டு மட்டுமே கூறி வருவதாகவும் உதயநிதி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment