பலத்த மழையால் பழைமையான வேப்ப மரம் முறிந்து விழுந்து 7 பக்தர்கள் பலி - 40 பேர் படுகாயம்
மும்பை, ஏப்.10 மகாராட்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாலபூர் தேசில் பகுதியில் பாபுஜி மகராஜ் மந்திர் சன்ஸ்தான் உள் ளது. இக்கோவிலுக்கு சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த மக்கள் வழிபாடுக்கு வருவது வழக்கமாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கமாம். நேற்று (9.4.2023) ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந் திருந்தனர். அவர்கள் மாலை நேர வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனராம். இக்கோவிலின் முன்பு தகர கொட்டகை ஒன்று போடப்பட்டுள்ளது. அதன் அருகே மிகவும் பழைமையான வேப்ப மரம் ஒன்று இருந்தது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாட்டு நேரத்தில் தகர கொட்ட கையில் அமர்ந்து ஓய்வெ டுப்பது வழக்கமாம்.
நேற்று (9.4.2023) வழி பாடு நடந்து கொண் டிருந்த போது பாலபூர் தேசில் பகுதியில் திடீ ரென மழை பெய்தது, சிறிது நேரத்தில் மழை வலுத்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியது. இதனால் கோவிலுக்கு முன்பு நின்ற வேப்ப மரம் பேயாட்டம் ஆடியது. இதைக் கண்டு கோவி லுக்கு வந்த பக்தர்கள் தகர கொட்டகையில் ஒதுங்கினர். 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தகர கொட்டகைக்குள் நெருக்கியடித்த படி நின்றனர். அப்போது வீசிய சூறைக்காற்றில் கோவில் முன்பு இருந்த வேப்ப மரம் பலத்த சத்தத்துடன் தகர கொட்டகை மீது சரிந்து விழுந்தது. இதில் தகர கொட்டகை இடிந்து விழுந்தது. அதனுள் நின்ற மக்கள் அனைவரும் தக ரக் கொட்டகைக்குள்ளும், மரத்தின் அடியிலும் சிக்கி கொண்டனர். இதனைக் கண்டு கோவி லுக்கு உள்ளே இருந்த பக்தர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும் ஓடி வந் தனர். அவர்கள் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்க முயன் றனர்.
இதுபற்றி தீயணைப்பு நிலையத்தினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜே.சி.பி. எந்தி ரங்களுடன் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். விடிய, விடிய இந்த மீட்பு பணி நடந்தது. இந்த விபத்தில் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்ட 7 பேர் பரிதாபமாக இறந் தனர்.
40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந் தனர். அவர்கள் அனைவரும் அகோலா மருத் துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment