கருநாடகாவில் வேடம் கட்டி ஆடும் ஹிந்துத்துவ அமைப்பினர்
‘‘எனக்கு ஓட்டுப் போட்டால் பெலகாவியை மகாராஷ்டிராவோடு இணைத்து மராட்டி பேசும் ஹிந்து மக்களுக்கான பூமி என்பதை நிரூ பிப்பேன்'' என்று பெலகாவி சட்ட மன்றத் தொகுதிக்குப் போட்டியிடும் ரமாகாந்த் கோயிஸ்கர் என்பவர் கூறியுள்ளது கருநாடகா இளைஞர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹிந்து சனாதன சங் என்ற அமைப்பின் தலைவர் ரமாகாந்த் கோயிஸ்கர். இவர் பல ஆண்டுகளாக பெலகாவி பகுதியில், ‘‘ஹிந்து இளை ஞர்களே, ஹிந்து பெண்களே, ஹிந்து விசுவாசிகளே ஹிந்து சனாதன தர்மத்தை காக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்'' என்று பேசி வந்தார். வடகிழக்கு கருநாடகாவில் பல இளைஞர்கள் அவர் பின் அவ ரது அமைப்பில் சேர்ந்தனர். ஹிஜாப் எதிர்ப்பு, லவ்ஜிகாத் போன்றவற்றை கையில் எடுத்து சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் வகை யில் சட்ட விரோதப் போராட் டங்களை நடத்தியுள்ளார். இவர் மீது பாஜக அரசும் மென்மையான போக்கையே காட்டி வந்தது.
இந்த நிலையில் அவர் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டி ருந்தார்.
அதில் ‘‘இந்த மண் (பெலகாவி) மராட்டியர்களுக்கானது. எனக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங் கள். நான் விதான் சவுதாவிற்குச் (கருநாடக சட்டமன்றம்) சென்று போராடி நம் பகுதியை மகாராட் டிராவோடு இணைத்து விடுவேன்'' என்றும் தான் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போதும் லட்சக்கணக்கான மராட்டியர்கள் ஒன்று திரண்டு நம் பலத்தை இவர் களுக்கு (கன்னடர்களுக்கு) காட்ட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
இதனால் இதுநாள் வரை இவரது ஹிந்து வெறிப் பேச்சைக் கேட்டு இவர் பின் சென்ற கன்னட இளை ஞர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள் ளனர்.
No comments:
Post a Comment