வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு களை மக்களிடம் கொண்டு செல்ல தமிழ்நாடு, கேரளா இரண்டு மாநிலங்களும் தொடர் நிகழ்ச்சி களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில், வைக்கம் போராட்டத்தில், பெரியாரின் பங்கு குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைக்க, அவருக்குப் பலரும் எதிர்வினை ஆற்றி வந்தனர்.
வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்பது, திராவிட இயக்கத்தவரின் மிகைக் கூற்று என ஜெயமோகன் முன்வைத்த கருத்துக்கு, பத்திரி கையாளர் சுகுணா திவாகர் உள்ளிட்டோர் ஆதாரப் பூர்வமான மறுப்புகளை முன்வைத்து எழுதினர். அந்த மறுப்புகளுக்கு இதுவரை எந்தப் பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் ஜெயமோகன்.
வைக்கம் போராட்டத்தின் வரலாற்று நினை வலைகளை இரு மாநில அரசுகளும் புதிய நோக் கத்தில் முன்னெடுத்ததும், ஜெயமோகனின் புரட்டுக் கருத்துகளும் வேகமெடுத்தன. சமூகவலை களங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், 'வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கெடுத்தார் என்பதை மறுப்பதற்கில்லை' என்று புதிய விளக் கத்தை, பழைய புரட்டுகளுடன் சேர்த்துக் கொடுத் துள்ளார்.
வரலாற்றுப் புரட்டுகளைக் கேள்வி கேட்கும் தலைமுறையிடம், வரலாற்றை மாற்ற நினைப் பவர்கள் தோற்கத்தான் வேண்டும். ஜெயமோகன் அதற்கான தமிழ்நாட்டு உதாரணம்.
நன்றி: முரசொலி (3.4.2023)
No comments:
Post a Comment