ராமநாதபுரம், ஏப். 13- கள்ளக்குறிச்சி, மற்றும் இராம நாதபுரம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பெருங்கலவரம் மூண்டு ஒருவருக்கு ஒருவர் அடிதடி நடத்திக் கொண்டனர். இதில் சிலருக்கு மண்டை உடைந்ததோடு, தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அலங்கார விளக் குகள் மாற்றும் நவீன ஸ்பீக்கர்களை சேதப்படுத்தினர். மேலும் மின்விசிறிகள் மற்றும் இருக்கைகளை உடைத்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பாலமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அப்போது புதிய நிர்வாகிகள் நியமனம் செய்வது தொடர்பாக வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் பாஜக கிழக்கு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் குழுவினரும், மாவட்ட பொதுச் செயலாளர் ரவி குழுவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. அப்போது இரு தரப்பி னரும் நாற்காலிகளை வீசித் தாக்கிக் கொண்டனர். இதில் 20-க்கும்மேற்பட்ட நிர்வாகிகள் காயமடைந்தனர். திருமண மண்டபத்திற்கும் பெரும் சேதம் ஏற்பட்டது
இராமநாதபுரத்தில்...
அதேபோல் இராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடியால் போர்க் களமானது.
பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசும் போது, ராம நாதபுரம் மேனாள் மாவட்டத் தலைவர் கதிரவன் பெயரை சொல்லவில்லை. இதனால், கதிரவனின் ஆதர வாளர்களில் ஒருவர் எழுந்து ‘கதிரவனின் பெயரைச் சொல்’ எனக் கூறிக் கூட்டத்தில் சத்தம் போட்டார். அதற்கு கருப்பு முருகானந்தம், ’கூட்டத்திற்கு வராதவர் பெயரெல்லாம் சொல்ல முடியாது’என்று கூறினார். உடனே பா.ஜ.க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே அனுப்பினர்.
கூட்டம் முடிந்து கருப்பு முருகானந்தம் மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார். அப்போது, மீண்டும் அந்த நபர் வந்து, ’ஏன் கதிரவன் பெயரை சொல்ல வில்லை?’எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், தரணி முருகேசன் ஆதரவாளர்களுக்கும், கதிரவன் ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற் பட்டது. கேள்வி எழுப்பிய வரை தரணி முருகேசன் ஆதரவாளர்கள் நாற்காலியைக் கொண்டு அடித்து விரட்டினர். இதனால், பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இரண்டு திருமண மண்டபங்களும் பெரும் சேதம் அடைந்தது, மின் விசிறிகள், எல் ஈ டி விளக்குகள், அலங்கார விளக்குகள், இருக்கைகள் மற்றும் ரவீன ஸ்பீக்கர்கள், மாலை நடக்க இருக்கும் திருமண வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்த அலங் காரப் பொருட்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
No comments:
Post a Comment